ADVERTISEMENT

திருச்சியில் இன்று 10 லட்சம் பேர் பங்கேற்கும் திமுக மாநாடு.. அதிரடி தேர்தல் வாக்குறுதிகளை அறிவிக்கும் முதல்வர் ஸ்டாலின்!

Published On:

| By Mathi

DMK Trichy Maanaadu

“‘ஸ்டாலின் தொட­ரட்­டும்; தமிழ்­நாடு வெல்­லட்­டும்’ என்ற முழக்கத்துடன் திருச்சியில் திமுக மாநாடு இன்று மார்ச் 9-ந் தேதி நடைபெற உள்ளது. இம்மாநாட்டில் திமுக நிர்வாகிகள் சுமார் 10 லட்சம் பேர் பங்கேற்க உள்ளனர். இம்மாநாட்டை ஒட்டி திருச்சி விழாக்கோலம் பூண்டுள்ளது.

திருச்சி சிறு­க­னூ­ரில் இன்று திமு­க­வின் பிர­மாண்டமான 12-வது மாநில மாநாடு நடை­பெற உள்­ளது.

ADVERTISEMENT

திமுக முதன்மை செயலாளரும் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என்.நேரு மாநாட்டுக்கான ஏற்பாடுகளை மிகப் பிரம்மாண்டமாக செய்துள்ளார்.

இன்று பிற்பகல் 3 மணிக்கு கலை நிகழ்ச்சிகளுடன் மாநாடு நடைபெற உள்ளது. மாலை 5.30 மணிக்கு மாநாட்டு திடலில் அமைக்கப்பட்டுள்ள 110 அடி உயர கொடி கம்பத்தில் திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் திமுக கொடியேற்றி மாநாட்டை தொடங்கி வைக்கிறார்.

ADVERTISEMENT

மாநாட்டு மேடைக்கு முதல்வர் ஸ்டாலின் வருவதற்காக அரை கிலோ தொலைவுக்கு ரேம்ப் வாக் அமைக்கப்பட்டுள்ளது.

இம்மாநாட்டுக்கு திமுக இளைஞரணி செயலாளரும் துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் முன்னிலை வகிக்கிறார். அமைச்சர் கே.என்.நேரு வரவேற்புரையாற்றுகிறார்.

ADVERTISEMENT

இம்மாநாட்டில் திமுக நிர்வாகிகள் உரையைத் தொடர்ந்து தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகின்றன. முதல்வர் ஸ்டாலின் சிறப்புரையில், முக்கியமான தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட உள்ளார். அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி நன்றி உரையாற்றுகிறார்.

திருச்சி வாக்குறுதிகள்

2021-ம் ஆண்டு திருச்சி சிறுகனூரில் இதே இடத்தில் நடைபெற்ற திமுக மாநாட்டில்தான் பெண்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்குவோம் என்பது உள்ளிட்ட 7 வாக்குறுதிகளை முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். இம்முறையும் அதே போல முக்கிய தேர்தல் வாக்குறுதிகளை ஸ்டாலின் வெளியிடுகிறார்.

விழா ஏற்பாடுகள்

  • 700 ஏக்கர் பரப்பளவில் மாநாட்டு திடல்
  • 200 ஏக்கரில் வாகன வசதி
  • 35,000 வாகனங்கள் நிறுத்தப்படும் என எதிர்பார்ப்பு
  • மாநாட்டுக்கு 9 நுழைவாயில்கள்
  • எல்இடி திரையுடன் கூடிய பிரம்மாண்டமான மேடை
  • 10 லட்சம் நிர்வாகிகளுக்கும் சைவம், அசைவம் உணவு
  • இருக்கை வசதிகள், குடிநீர், சிற்றுண்டி ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

திமுகவின் மாநாடுகள்

1-வது மாநில மாநாடு (1951): சென்னையில் பேரறிஞர் அண்ணா தலைமையில் நடைபெற்றது. கட்சியின் கொள்கைகள் மற்றும் அமைப்பு விரிவாக்கம் குறித்து விவாதிக்கப்பட்டது.

2-வது மாநில மாநாடு (1956): திருச்சியில் நடைபெற்றது. தேர்தலில் போட்டியிடுவது குறித்து தொண்டர்களிடம் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு, திமுக தேர்தல் அரசியலில் நுழைய முக்கிய முடிவெடுக்கப்பட்டது.

3-வது மாநில மாநாடு (1961): மதுரையில் அண்ணா தலைமையில் நடைபெற்றது. சமூக நீதி, மொழி மற்றும் மாநில உரிமைகள் குறித்த தீர்மானங்கள் வலியுறுத்தப்பட்டன.

4-வது மாநில மாநாடு (1966): சென்னையில் நடைபெற்றது. 1967 சட்டமன்றத் தேர்தலுக்கான வியூகங்கள் வகுக்கப்பட்டன; இதன் தொடர்ச்சியாக திமுக முதன்முறையாக ஆட்சியைப் பிடித்தது.

5-வது மாநில மாநாடு (1975): கோவையில் முதல்வர் கலைஞர் தலைமையில் நடைபெற்றது. கட்சியின் அரசியல் வலிமையை வெளிப்படுத்தும் நிகழ்வாக அமைந்தது.

6-வது மாநில மாநாடு (1990): திருச்சியில் பிப்ரவரி 9, 10, 11 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. எதிர்க்கட்சியாக இருந்த காலத்தில் கட்சி அமைப்பை வலுப்படுத்த இது உதவியது.

7-வது மாநில மாநாடு (1993): கோவையில் நடைபெற்றது. கொங்கு மண்டலத்தில் திமுகவின் வளர்ச்சியை அதிகப்படுத்த இந்த மாநாடு முக்கியப் பங்காற்றியது.

8-வது மாநில மாநாடு (1996): திருச்சியில் கலைஞர் தலைமையில் நடைபெற்றது. தேசிய அரசியல் மாற்றங்கள் மற்றும் கூட்டணி அரசியல் குறித்து இதில் விவாதிக்கப்பட்டது.

9-வது மாநில மாநாடு (2006): திருச்சியில் கலைஞர் தலைமையில் நடைபெற்றது. இந்த மாநாட்டைத் தொடர்ந்து நடந்த தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை அமைத்தது.

10-வது மாநில மாநாடு (2014): திருச்சியில் கலைஞர் தலைமையில் நடைபெற்றது. சமூக நலத் திட்டங்கள் மற்றும் தேர்தல் வாக்குறுதிகளை மையப்படுத்தி இம்மாநாடு அமைந்தது.

11-வது மாநில மாநாடு (2021): திருச்சியில் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.

12-வது மாநில மாநாடு (2026): திருச்சி சிறுகனூரில் இன்று (மார்ச் 9) முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகிறது. ‘ஸ்டாலின் தொடரட்டும்; தமிழ்நாடு வெல்லட்டும்’ என்ற முழக்கத்துடன் 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்கும் பிரம்மாண்ட நிகழ்வாக இது அமைகிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share