காவிரியில் கரைபுரண்டோடும் பெரும் வெள்ளம்: மேட்டூர் அணையில் இருந்து 1 லட்சம் கன அடிநீர் வெளியேற்றம்!

Published On:

| By Mathi

Cauvery Mettur Dam

மேட்டூர் அணையில் (Cauvery Mettur Dam) இருந்து வினாடிக்கு 1 லட்சம் கன அடிநீர் வெளியேற்றப்படுவதால் காவிரி கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கர்நாடகாவின் கேஆர்எஸ் மற்றும் கபினி அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் திறந்துவிடப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் கர்நாடகா- தமிழக எல்லையான பிலிகுண்டுவை தாண்டி ஒகேனக்கலுக்கு வினாடிக்கு 88,000 கன அடிநீர் வந்து கொண்டிருக்கிறது. இதனையடுத்து ஒகேனக்கலில் அருவிகளில் பொதுமக்கள் குளிக்கவும் பரிசல்கள் இயக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

காவிரி நீர் வரத்து அதிகரித்து வந்ததால் மேட்டூர் அணையில் இருந்து திறந்துவிடப்படும் நீரின் அளவு வினாடிக்கு 75,000 கன அடியில் இருந்து 1,00, 000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 18,000 கன அடி நீரும் 16 மதகு கண் வழியாக 82,000 கன அடிநீரும் வெளியேற்றப்படுகிறது.

ADVERTISEMENT

மேட்டூர் அணையில் இருந்து அதிகளவில் நீர் திறந்துவிடப்படுவதால், காவிரி கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காவிரி கரையோர பகுதி மக்கள் தங்கள் உடைமைகளைப் பாதுகாத்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர். நடப்பாண்டில் ஏற்கனவே 4 முறை மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியிருந்தது, மேட்டூர் அணை கட்டப்பட்ட 91 ஆண்டுகளில் 44-வது முறையாக முழு கொள்ளளவான 120 அடியை எட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share