தமிழ்நாட்டுக்கு வரிப் பகிர்வாக மத்திய அரசு ரூ. 4,144 கோடியை விடுத்துள்ளது. ஆனால் உத்தரப்பிரதேச மாநிலத்துக்கு மிக அதிகபட்சமாக ரூ ரூ.18,227 கோடியும், சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள பீகாருக்கு ரூ.10,219 கோடியும் மத்திய அரசு விடுவித்துள்ளது.
மத்திய அரசு, பண்டிகை காலங்களை முன்னிட்டும் மாநில மூலதனச் செலவுகளை விரைவுபடுத்தவும் திட்டங்களுக்கு நிதி அளிக்கவும் மொத்தம் ரூ.1,01,603 கோடி நிதியை விடுவித்துள்ளது.
இதில் தமிழ்நாட்டுக்கு வெறும் ரூ.4,144 கோடி மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது.
நாட்டிலேயே மிக அதிகமாக உத்தரப்பிரதேச மாநிலத்துக்கு தமிழ்நாட்டைப் போல 4 மடங்குக்கும் அதிகமாக ரூ.18,227 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.
2-வதாக சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற இருக்கும் பீகார் மாநிலத்துக்கு ரூ.10, 219 கோடியை விடுவித்துள்ளது.

தென்னிந்திய மாநிலங்களான
ஆந்திரா- ரூ. 4,112 கோடி
தெலுங்கானா- ரூ. 2,136 கோடி
கேரளா – ரூ.1,956 கோடி
கர்நாடகா- ரூ.3,705 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது மத்திய அரசு.

தமிழகம் உள்ளிட்ட தென் இந்திய மாநிலங்களுக்கு மொத்தம் ரூ.16,053 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேசம் எனும் ஒரு மாநிலத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதி கூட ஒட்டுமொத்த தென்னிந்திய மாநிலங்களுக்கு ஒதுக்கப்படவில்லை.
மாநிலங்கள் வாரியாக நிதி ஒதுக்கீடு விவரம்:
