ADVERTISEMENT

ஏங்க.. கூமாபட்டி பிளவக்கல் அணைக்கு ரூ10 கோடி ஒதுக்கீடு- அரசாணை வெளியீடு

Published On:

| By Mathi

Pilravakkal Dam

விருதுநகர் மாவட்டம் கூமாபட்டி பிளவக்கல் அணை பூங்கா மேம்பாட்டு பணிகளுக்காக ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

சமூக வலைதளங்களில், ‘ஏங்க.. கூமாபட்டி அணைக்கு வாங்க’ என்ற ரீல்ஸ் வைரலாகி பட்டி தொட்டி எங்கும் பரவியது. அந்த கூமாபட்டி அணைதான் பிளவக்கல் அணை.

ADVERTISEMENT

இந்த பிளவக்கல் அணையில் பூங்கா மேம்பாட்டு பணிகள் ரூ10 கோடி செலவில் மேற்கொள்ளப்படும் என முதல்வர் ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்திருந்தார். இதனடிப்டையில் இந்த பணிகளுக்கு ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

பிளவக்கல் அணையில் பூங்கா சுற்றுச் சுவர், நுழைவு வாயில், நடைபாதை, குழந்தைகள் விளையாடும் இடம், உடற்பயிற்சி கூடம், செல்ஃபி பாயிண்ட் ஆகியவை அமைக்கப்பட உள்ளன.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share