வைகோ மீதான வழக்கை வாபஸ் பெறக்கோருகிறார் பிரேமலதா

Published On:

| By Balaji

நெல்லையில் நேற்று நடைபெற்ற தேமுதிக பொதுக்கூட்டத்தில் பேசிய பிரேமலதா, கடந்த நான்கு மாதங்களாக தேமுதிகவை கூட்டணிக்காக தேடி வராத கட்சிகளே இல்லை. திமுக, அதிமுகவுக்கு ஒரு மாற்றுக் கட்சியாக தேமுதிக இருக்கும். பேரம் பற்றி பேசியதற்காக, வைகோவுக்கு கருணாநிதியால் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. வைகோ அதை சட்டரீதியாக சந்திப்பார். நாளிதழில் வந்த செய்திக்காக வைகோவிற்கு நோட்டீஸ் அனுப்பியிருப்பது தலைகுனிவானது. வைகோவிற்கு அனுப்பிய நோட்டீஸை திமுக தலைவர் கருணாநிதி திரும்பப் பெற வேண்டும் என்று கூறினார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share