தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் கேரக்டரில் தெலுங்கு நடிகர் மஞ்சு மனோஜ் நடிக்கிறார். ‘ஒக்கடு மிக்கிலது’ எனப் பெயரிட்டிருக்கும் இத்திரைப்படத்தில் மொத்தமாக இரண்டு கேரக்டரில் இவர் நடிக்கிறார். 1990ஆம் ஆண்டுகளில் பிரபாகரன் அவர்களின் வாழ்க்கை இருந்த நிலையை அடிப்படையாகக் கொண்டதும், 2017ஆம் ஆண்டில் மாணவர்கள் அமைப்பின் தலைவராக ஒரு கேரக்டரிலும் என அந்த இரண்டு கேரக்டர்கள் திட்டமிட்டிருக்கின்றன. நேற்று (06.04.17) மாலை இந்த அறிவிப்பை தனது ட்விட்டர் கணக்கு மூலமா வெளியிட்டார் மஞ்சு மனோஜ்.

தமிழ் சினிமாவுக்கும் மஞ்சு மனோஜுக்கும் அதிக சம்பந்தம் இல்லை. மிஸ்கினின் ‘சித்திரம் பேசுதடி’ திரைப்படத்தை, ராஜு பாய் என்ற பெயரில் ரீமேக் செய்திருக்கிறார். அவரது ‘நேனு மீகு தெலுசா?’ திரைப்படம் ‘என்னைத் தெரியுமா?’ என்ற பெயரில் தமிழில் டப் செய்யப்பட்டு ஒரே நாளில் தியேட்டரைவிட்டு வெளியேற்றப்பட்டது. நடிகர் மோகன் பாபுவின் மகன் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
