பிரதமரை பற்றி கொச்சையாக பேசுவதா? – நயினார் நாகேந்திரன் கண்டனம்

Published On:

| By Pandeeswari Gurusamy

ஈரோடு மாவட்டம் கோபிச் செட்டி பாளையம் ஜியான் தியேட்டர் அருகில் ஈரோடு வடக்கு மாவட்ட திமுக மாணவர் அணி சார்பில் கூட்டம் நடைப்றறது. இந்த கூட்டத்தில் திமுக வர்த்தக அணி மாநிலச் செயலாளர் காசி முத்து மாணிக்கம் பேசுகையில் பிரதமர் மோடி குறித்து கடும் விமர்சனங்களை முன்வைத்ததாக கூறப்படுகிறது. காசி முத்து மாணிக்கம் பேசுக்கு தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் பதிவில், “ஈரோடு மாவட்டத்தில் நடைபெற்ற ஒரு கட்சி நிகழ்வில் நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி குறித்து திமுக மாநில வர்த்தகர் அணிச் செயலாளர் திரு. காசி முத்து மாணிக்கம் ஆட்சேபிக்கத்தக்க வகையில் கொச்சையாகப் பேசியிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

ADVERTISEMENT

தேசத்தின் உயரிய பதவியில் இருக்கும் தலைவரைக் குறித்து பொது மேடையில் மலினமாகப் பேசுவதும், அதனை மேடையில் இருப்போரும், சுற்றி இருப்போரும் கைத்தட்டிச் சிரித்து ரசிப்பதும் ஒட்டுமொத்த திமுக உடன்பிறப்புகளின் குரூரப் போக்கை வெளிப்படுத்துகிறது.

பிரதமரைக் குறித்து தகாத வாரத்தையில் பேசுவதில் தொடங்கி பிரதமருக்குக் கொலைமிரட்டல் விடுப்பது வரை தொடர்ந்து அரசியல் மாண்பின் எல்லையை மீறி நடந்து கொள்ளும் திமுகவின் கீழ்த்தரமான போக்கை, இனியும் பொறுத்துக்கொள்ள முடியாது! பிரதமரை இழிவுபடுத்தியதற்கு திமுக மாநில வர்த்தகர் அணிச் செயலாளர் உடனடியாக பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்.

ADVERTISEMENT

உலகமே போற்றும் தலைவரை அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகக் கொச்சையாகத் தூற்றும் அறிவாலையம் மொத்தமாக அழியும் நாள் தூரமில்லை!” என குறிப்பிட்டுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share