டீயும் காபியும் கலக்க முடியுமா? விஜய் தவெக- பாஜக கூட்டணி குறித்து அண்ணாமலை

Published On:

| By Mathi

TVK BJP Allaince

அதிமுக- பாஜக கூட்டணியில் விஜய்யின் தவெகவை இணைக்க பேச்சுவார்த்தை நடைபெறுவதாக கூறப்படுவது பற்றி தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை விளக்கம் அளித்துள்ளார்.

சென்னையில் இன்று மார்ச் 10-ந் தேதி அண்ணாமலை அளித்த பேட்டி: விஜய்யைப் பொறுத்தவரை நான் ஏற்கனவே பலமுறை சொல்லியிருக்கின்றேன். அதிகாரப்பூர்வமாக இந்த கட்சியினுடைய தலைவர் நயினார் நாகேந்திரன் , அதிகாரப்பூர்வமாக அது போன்ற பேச்சு வார்த்தை எதுவும் இல்லை என்று தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள். என்னைப் பொறுத்தவரை ஒரு டீயும் காபியும் எப்பொழுதும் கலக்காது என்று சொல்லிக் கொண்டிருக்கின்றேன், காரணம் சித்தாந்தங்கள் வேறு.

ADVERTISEMENT

ஆனால் இன்னைக்கு ஊடக நண்பர்கள் உங்களுடைய ஊகத்துலதான் பல இடத்துல எழுதுறீங்க.

நாங்க இன்னைக்கு வலிமையா இருக்கிறோம். தேசிய ஜனநாயக கூட்டணி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி இன்னைக்கு எங்களுடைய கூட்டணி வலுவாக இருக்கிறது, தேர்தலை சந்திப்பதற்குத் தயாராக இருக்கின்றோம். ஒரு பெரும் வெற்றியும் பெறுவோம் என்கின்ற முழு நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது.

ADVERTISEMENT

பாஜக செய்தித் தொடர்பாளராக இருந்த
ஏ.என்.எஸ் பிரசாத், கட்சியினுடைய ஒரு மூத்த உறுப்பினர். ஒரு நல்ல செய்தி தொடர்பாளர். பத்திரிகையாளர்களிடம் மிக நெருங்கிய தொடர்பில் இருக்கக்கூடிய மனிதர்.

அதனால் மாநிலத் தலைவருடைய அறிவிப்பு, (பதவி பறிப்பு அறிக்கை) நாமெல்லாம் தேவையில்லாமல் எதற்கும் முடிச்சுப் போட்டுக்க வேண்டாம். இது செஞ்சாரு அதனால நீக்கி இருக்கிறாங்கன்னு.. அவரும் இந்தத் தேர்தல்ல வேறு வேறு பொறுப்புல இருப்பாங்க. ஒரு மூத்த தலைவர் வேறு வேறு பொறுப்புல செயல்படுவார்.

ADVERTISEMENT

நாளை நம்முடைய பாரதப் பிரதமர் நரேந்திர மோடி , கொச்சியில் இருந்து நேரடியாக திருச்சிக்கு வர இருக்கிறார்கள். நாளை மாலை ஒரு பிரம்மாண்டமான ஒரு பொதுக்கூட்டம் திருச்சியில் நடைபெற இருக்கிறது. இவ்வாறு அண்ணாமலை கூறினார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share