வால்ட் டிஸ்னியின் அடுத்த பரபர.. கலகல

Published On:

| By Minnambalam Desk

உலகப் புகழ் பெற்ற வால்ட் டிஸ்னி ஸ்டுடியோஸ் நிறுவனத்தில் இருந்து அடுத்து வரும் போலீஸ் காமெடி படம் ’ஜூடோபியா 2’ (zootopia).

ஜார்ட் புஷ் எழுதி பைரன் ஹோவார்ட்டுடன் இணைந்து இயக்கி இருக்கும் படம் இது.

ADVERTISEMENT

    2016 ஆம் ஆண்டு அகாடமி விருதை ’ஜூடோபியா’ முதல் பாகத்தில் வென்ற ஜின்னிஃபர் குட்வின், ஜேசன் பேட்மேன் ஆகியோரின் குரல் இந்தப் படத்திலும் இருக்கிறது.

    கதைப்படி கேரி டி’ஸ்னேக் (கே ஹை குவான் குரல்) ஜூடோபியாவிற்கு வந்து விலங்கு உலகத்தை தலைகீழாக மாற்றுகிறார். அப்போது அங்கு இருக்கும் ஜூடி மற்றும் நிக் (ஜின்னிஃபர் குட்வின், ஜேசன் பேட்மேன் குரல்கள்) ஆகியோர் இதை முறியடிக்க, எதிர்பாராத புதிய பகுதிகளுக்கு ரகசியமாகச் செல்ல வேண்டும்.

    ADVERTISEMENT

    அடுத்து என்ன என்பதுதான் பரபர.. கலகல.

    ஆஸ்கார் விருது வென்ற இயக்குநர்கள் ஜாரெட் புஷ், பைரன் ஹோவர்ட் மற்றும் தயாரிப்பாளர் யெவெட் மெரினோ ஆகியோரின் இந்த ’ஜூடோபியா 2’ படத்தில் ஃபார்ச்சூன் ஃபீம்ஸ்டர், குயின்டா பிரன்சன் மற்றும் கெஸல்லாக ஷகிரா ஆகிய பிரபல அமெரிக்க நடிகர்களின் குரல்களும் இடம்பெற்றுள்ளது.

    ADVERTISEMENT

    வால்ட் டிஸ்னி ஸ்டுடியோஸ் இந்தியா நவம்பர் 28 அன்று இந்திய திரையரங்குகளில் பிரத்யேகமாக ’ஜூடோபியா 2’ திரைப்படத்தை ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியிடுகிறது.

    – ராஜ திருமகன்

    செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
    Join Our Channel
    Share