கனடாவில் மான்களுக்கிடையே பரவும் ஜாம்பி டிசீஸ்!

Published On:

| By admin

கனடா நாட்டில் உள்ள மான்களுக்கு இடையே கிரோனிக் வெஸ்டிங் டிசீஸ் (Chronic Wasting Disease – CWD) பரவி வருவதாக கூறப்படுகிறது. குறிப்பாக கனடா நாட்டின் அல்பெர்டா, சாஸ்கட்ச்வான் ஆகிய பகுதிகளில் இந்த நோய் மான்கள் மத்தியில் பரவி வருவதாக கூறப்படுகிறது. மான், மிளா போன்ற அனைத்து வகை மான் இனங்களுக்கு மத்தியிலும் இந்த நோய் பரவி வருகிறது.

இந்த நோய் முதன் முதலில் 1960ல் அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டது. இது மெல்ல மெல்ல அமெரிக்காவின் 26 மாகாணங்களில் பரவியது. தற்போது இதே நோய் தற்போது கனடாவில் பரவி வருகிறது ஆனால் இந்த நோய் மனித உடலுக்குள் செல்வது எவ்வாறான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்ற அறிவியல் ரீதியிலான ஆய்வுகள் இல்லை. இருப்பினும் விஞ்ஞானிகள் இந்த நோயிடமிருந்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என கூறியுள்ளனர்.

இந்த நோய் பாதிக்கப்பட்ட விலங்குகளை அடித்து சமைத்து சாப்பிடுவது மூலம், இந்த நோய் மனிதர்களுக்கு பரவவும் வாய்புள்ளதாக கூறப்படுகிறது. இந்த நோய்கிருமிகள் மனித ரத்தத்துடன் கலந்து விட்டால் அது மனித உடலுக்குள் பரவ தொடங்கும். இது மட்டுமல்ல இந்த நோய் பாதித்த விலங்குகளை கையாண்டால் கூட அந்த கிருமிகள் மனித உடலுக்குள் செல்ல வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நோய் மிருகங்களுக்கு பாதிக்கப்பட்டதும் அது நேரடியாக அதன் மூளையை தாக்கி மிருகம் அதன் கட்டுப்பாட்டை இழக்கிறது. இந்த நோய் பாதிக்கப்பட்ட மிருகங்கள் வாயில் வழக்கத்தை விட அதிகமாக எச்சில் வடிவது, மற்ற மிருகங்களுடன் சேராமல் இருப்பது, வழக்கத்திற்கு மாறான நடவடிக்கைகள், அதிகமாக நீர் வெளியேறுவது, உடல் எடை குறைவது போன்ற அறிகுறிகள் உள்ளன. இப்போதுதான் கொரோனாவிலிருந்து தப்பித்து இயல்பு வாழ்க்கைக்கு திரும்புகிறோம் என்று நினைத்தால், இப்படி புதுப்புது நோய்கள் கிளம்பி கொண்டிருக்கிறதை பார்த்தால் சற்று பயமாகத்தான் உள்ளது. இது ஒரு ஜாம்பி நோய் என்று பரவலாக பேசப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share