தலையில் என்னடா இது புது “கிளிப்”? ஜோமேட்டோ ஓனரின் 200 கோடி ரூபாய் “டெம்பிள்” ப்ராஜெக்ட்!

Published On:

| By Santhosh Raj Saravanan

zomato ceo deepinder goyal temple wearable device anti aging investment tamil news

இந்தியாவின் முன்னணி டெலிவரி நிறுவனமான Zomato-வின் சிஇஓ தீபிந்தர் கோயல், சமீபத்தில் ராஜ் ஷமானி (Raj Shamani) என்பவருடன் நடந்த பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது அவர் நெற்றியின் ஓரத்தில் (Temple area) ஒரு சிறிய சில்வர் நிற கருவியை அணிந்திருந்தார். அது என்னவென்று இணையவாசிகள் “எக்ஸ்டர்னல் ஹார்ட் டிஸ்க்”, “பிம்பிள் பேட்ச்” என்றெல்லாம் கிண்டல் செய்து வந்த நிலையில், அதன் உண்மைத் தன்மையை அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

அது என்ன “டெம்பிள்” (Temple) கருவி? இதன் பெயர் டெம்பிள்”. இது ஒரு அதிநவீன Health Wearable Device (உடல்நல கண்காணிப்பு கருவி).

ADVERTISEMENT
  • வேலை என்ன? இது மூளைக்குச் செல்லும் ரத்த ஓட்டத்தை (Cerebral Blood Flow) துல்லியமாகவும், இடைவிடாமலும் (Real-time) கண்காணிக்கும்.
  • ஏன் இந்தப் பெயர்? தலையின் பொட்டுப்பகுதி அல்லது நெற்றிப்பொட்டு (Temple) பகுதியில் இதை அணிவதால் இப்பெயர் வைக்கப்பட்டுள்ளது.

எதற்காக இந்த ஆராய்ச்சி? – “Gravity Ageing Hypothesis” இந்தக் கருவிக்குப் பின்னால் ஒரு விசித்திரமான அறிவியல் கோட்பாடு உள்ளது. அதற்குப் பெயர் புவிஈர்ப்பு விசை முதுமை கோட்பாடு” (Gravity Ageing Hypothesis).

  • தீபிந்தர் கோயலின் கருத்துப்படி, நாம் நாள் முழுவதும் நிமிர்ந்து நடப்பதால், புவிஈர்ப்பு விசை (Gravity) காரணமாக ரத்தம் கீழ்நோக்கி இழுக்கப்படுகிறது. இதனால் மூளைக்குச் செல்லும் ரத்த ஓட்டம் காலப்போக்கில் குறையலாம்.
  • இந்த ரத்த ஓட்டம் குறைவதால்தான் மனிதர்களுக்கு விரைவில் முதுமை (Ageing) ஏற்படுகிறது என்பது இவர்களின் கணிப்பு.
  • இந்த “டெம்பிள்” கருவி மூலம் மூளையின் ரத்த ஓட்டத்தைக் கண்காணித்து, அதைச் சீராக வைத்திருந்தால், வயதாவதைத் தாமதப்படுத்த முடியுமா என்று ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.

சொந்த செலவில் 200 கோடி! இது Zomato நிறுவனத்தின் தயாரிப்பு அல்ல. இது தீபிந்தர் கோயலின் தனிப்பட்ட ஆர்வம். இதற்காக “Continue Research” என்ற தனி நிறுவனத்தைத் தொடங்கி, தனது சொந்தப் பணமான சுமார் 25 மில்லியன் டாலர்களை (சுமார் ரூ.225 கோடி) முதலீடு செய்துள்ளார். கடந்த ஒரு வருடமாக அவரே இந்தக் கருவியை அணிந்து சோதனை செய்து வருகிறார்.

ADVERTISEMENT

விமர்சனங்களும் சர்ச்சைகளும்: இந்தக் கண்டுபிடிப்புக்கு ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பியுள்ளன.

  • மருத்துவர்கள் கருத்து: டெல்லி AIIMS மருத்துவமனையின் முன்னாள் மருத்துவர் சுவ்ரங்கர் தத்தா (Dr. Suvrankar Datta), “இது அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்படாத ஒன்று. வெறும் பணக்காரர்களின் விளையாட்டுப் பொருள் (Fancy Toy)” என்று கடுமையாக விமர்சித்துள்ளார். புவிஈர்ப்பு விசையால் முதுமை ஏற்படுகிறது என்பதற்கு வலுவான ஆதாரங்கள் இல்லை என்பது மருத்துவர்களின் வாதம்.
  • ஆதரவு: ஆனால், சில ஸ்டார்ட்அப் நிறுவனர்கள் இதை “துணிச்சலான மற்றும் சுவாரஸ்யமான முயற்சி” (Wild and fascinating) என்று பாராட்டி வருகின்றனர்.

எது எப்படியோ, உணவு டெலிவரி செய்துகொண்டிருந்த ஒருவர், இப்போது மனித ஆயுளை நீட்டிக்கும் ஆராய்ச்சியில் இறங்கியிருப்பது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த “டெம்பிள்” கருவி எதிர்காலத்தில் விற்பனைக்கு வருமா அல்லது வெறும் சோதனையோடு நிற்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share