ஸ்டிரைக் மிரட்டல்… ஆனால் 75 லட்சம் ஆர்டர்கள்! – புத்தாண்டு இரவில் ஜோமாட்டோ சிஇஓ சொன்ன ‘பளீச்’ பதில்!

Published On:

| By Santhosh Raj Saravanan

zomato blinkit record 75 lakh orders new years eve deepinder goyal response gig workers strike tamil news

ஒருபக்கம் “எங்களுக்குச் சரியான ஊதியம் இல்லை, வேலை பாதுகாப்பு இல்லை” என்று போராடும் ஊழியர்கள்… மறுபக்கம் “வரலாறு காணாத சாதனை” என்று கொண்டாடும் நிறுவனம். இந்த முரண்பட்ட சூழலில்தான் கடந்த டிசம்பர் 31, 2025 அன்று இந்தியாவின் முன்னணி உணவு டெலிவரி நிறுவனமான ஜோமாட்டோ (Zomato) மற்றும் அதன் துணை நிறுவனமான பிளிங்கிட் (Blinkit) மாபெரும் சாதனையையைப் படைத்துள்ளன.

ஒரே நாளில் 75 லட்சம் ஆர்டர்கள்:

ADVERTISEMENT

புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது உணவு ஆர்டர்கள் குவிவது வழக்கம். ஆனால், இம்முறை ஜோமாட்டோ மற்றும் பிளிங்கிட் இணைந்து ஒரே நாளில் 75 லட்சத்திற்கும் அதிகமான (7.5 Million) ஆர்டர்களை டெலிவரி செய்து புதிய வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளன. இதுவே அந்நிறுவனங்களின் ஒரு நாள் அதிகபட்ச ஆர்டர் எண்ணிக்கை ஆகும்.

வேலைநிறுத்தப் போராட்டமும் சர்ச்சையும்:

ADVERTISEMENT

புத்தாண்டு தினத்திற்கு முன்னதாக, நாடு முழுவதும் உள்ள கிக் (Gig) தொழிலாளர்கள் சங்கங்கள் வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தன. குறைந்த ஊதியம், சமூகப் பாதுகாப்பு இல்லாமை மற்றும் 10 நிமிட டெலிவரி முறையால் ஏற்படும் அழுத்தம் ஆகியவற்றைக் கண்டித்து இந்தப் போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், இந்த வேலைநிறுத்தம் தங்கள் சேவையை எந்த வகையிலும் பாதிக்கவில்லை என்று ஜோமாட்டோ நிறுவனத்தின் சிஇஓ தீபிந்தர் கோயல் (Deepinder Goyal) தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

தீபிந்தர் கோயல் கூறியது என்ன?

இது குறித்து அவர் தனது எக்ஸ் (X) தளத்தில் வெளியிட்ட பதிவில், “வேலைநிறுத்த அறிவிப்புகள் இருந்தபோதிலும், புத்தாண்டு இரவில் எங்கள் சேவை தடையின்றி நடந்தது. சுமார் 4.5 லட்சம் டெலிவரி பார்ட்னர்கள் பணிக்கு வந்து, 63 லட்சம் வாடிக்கையாளர்களுக்கு உணவை விநியோகித்துள்ளனர். ஒரு சில விஷமிகளைச் சமாளிக்க உதவிய காவல்துறைக்கு நன்றி” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் கிக் பொருளாதாரம் குறித்த விமர்சனங்களுக்குப் பதிலளிக்கும் விதமாக, “ஒரு அமைப்பு அடிப்படையில் நியாயமற்றதாக (Fundamentally Unfair) இருந்தால், இத்தனை லட்சம் பேர் விரும்பி வந்து அதில் இணைய மாட்டார்கள். தவறான வதந்திகளை நம்ப வேண்டாம்” என்று காட்டமாகத் தெரிவித்துள்ளார்.

உண்மை நிலவரம் என்ன?

தீபிந்தர் கோயலின் இந்தக் கருத்து சமூக வலைதளங்களில் விவாதத்தைக் கிளப்பியிருக்கிறது. “வேலை இல்லை என்பதால் தான் இளைஞர்கள் இதில் சேருகிறார்களே தவிர, இது மிகச்சிறந்த வேலை என்பதால் அல்ல” என்று ஒரு தரப்பினர் விமர்சிக்கின்றனர். அதேவேளையில், “இந்தியாவின் வேலையில்லாத் திண்டாட்டத்திற்கு இது ஒரு பெரிய தீர்வாக இருக்கிறது” என்று ஆதரவுக் குரல்களும் எழுகின்றன.

எது எப்படியோ, சர்ச்சைகளுக்கு நடுவே புத்தாண்டு வசூலில் ஜோமாட்டோ சக்கைப்போடு போட்டுள்ளது என்பது மட்டும் மறுக்க முடியாத உண்மை!

இதையும் படிங்க!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share