‘நீங்கள் ஏன் கோட் சூட் போடவில்லை’ – ஜெலன்ஸ்கி- டிரம்ப் சண்டையின் பின்னணி

Published On:

| By Kumaresan M

உக்ரைன் – ரஷ்யா போரை நிறுத்துவது தொடர்பாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி சந்தித்தார். அப்போது, செய்தியாளர் ஒருவர் நீங்கள் ஏன் கோட் சூட் அணிந்து வரவில்லை . இந்த நாட்டின் மிக உயர்ந்த அலுவலகத்துக்கு வந்துள்ளீர்கள் என்று தெரியதா? உங்களிடம் கோட் சூட் இல்லையா? என்று கேள்வி எழுப்பினார். Zelenskyy why don’t you wear a suit?

அதற்கு பதில் அளித்த ஜெலன்ஸ்கி, இதனால், உங்களுக்கு என்ன பிரச்னை? என்று திருப்பி கேட்டார். அதற்கு அந்த செய்தியாளர், எங்கள் நாட்டு உயர்ந்த அலுவலகத்தின் டிரஸ் கோடை நீங்கள் மதிக்கவில்லை என அமெரிக்கர்களான நாங்கள் கருதுகிறோம் என்று பதிலுக்கு சொன்னார். தொடர்ந்து, செய்தியாளருக்கு பதிலளித்த ஜெலன்ஸ்கி, போர் முடிந்ததும் உங்களை போல ஆடை நான் அணியலாம். நன்றி என்று கூறி முடித்து கொண்டார். Zelenskyy why don’t you wear a suit?

கனிமவளங்கள்தான் குறியா?

உக்ரைனில் கனிம வளங்கள் குவிந்து கிடக்கிறது. இதனால், கனிம வளங்கள் உள்ளிட்ட ஒப்பந்தத்தில் கையொப்பமிட ஜெலன்ஸ்கியை அமெரிக்கா நிர்பந்தித்து வருகிறது. இதுவரை உக்ரைனுக்காக 350 பில்லியன் அமெரிக்க டாலர்களை அமெரிக்கா செலவழித்துள்ளது. இதற்கு பதிலாக உக்ரைனிடம் ரூ.43 லட்சம் கோடி மதிப்பிலான கனிமங்களை அமெரிக்கா எடுத்துக்கொள்ளும் என்று ஏற்கனவே டிரம்ப் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சில நாட்களுக்கு முன், அதற்கேற்ற வகையில், அமெரிக்கா ஒப்பந்தம் ஒன்றை தயார் செய்தது. அமெரிக்காவின் கருவூல செயலாளர் ஸ்காட் பெசன்ட் ஜெர்மனியின் முனிச் நகரில் நடந்த மாநாட்டில் பங்கேற்ற உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்து ஒப்பந்தத்தில் கையெழுத்து வாங்க முயன்றார். Zelenskyy why don’t you wear a suit?

அந்த ஒப்பந்தத்தில் ‛ரஷ்யாவை எதிர்த்து போரிட உக்ரைனுக்கு கடந்த 3 ஆண்டுகளாக அமெரிக்கா உதவி செய்து வருகிறது. பல லட்சம் கோடி செலவிடப்பட்டுள்ளது. இதற்கு பதிலாக உக்ரைனில் உள்ள கனிமங்களில் 50 சதவிகிதத்தை அமெரிக்கா எடுத்து கொள்ளும்’ என்று கூறப்பட்டிருந்தது. இதை பார்த்து ஆடிப் போன ஜெலன்ஸ்கி ஒப்பந்தத்தில் கையொப்பமிட மறுத்து விட்டார்.

தொடர்ந்து, வாஷிங்டனுக்கு வந்த போது, கனிம வள ஒப்பந்தத்தில் ஜெலன்கியை கையொப்பமிட வைக்க வேண்டுமென்பது அமெரிக்காவின் திட்டமாக இருந்தது.

2024 உலக பொருளாதார மன்ற அறிக்கையின்படி உக்ரைனில் பல அரிய வகை கனிமங்கள் நிறைந்துள்ளன. பெர்லியம், மாங்கனீஸ், யுரேனியம், ஜிர்கோனியம், கிராபைட், புளுரைட், நிக்கல் , லித்தியம், டைட்டேனியம் என கனிமங்கள் உக்ரைனில் குவிந்து கிடக்கிறது. இவை அனைத்தும் பாதுகாப்பு துறை, தொழில்நுட்பத் துறை, எலக்ட்ரிக் கார்கள் உற்பத்தி, எலக்ட்ரானிக் பொருட்கள் உற்பத்திக்கு தேவையான கனிமங்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.Zelenskyy why don’t you wear a suit?

ஐரோப்பாவில் காணப்படும் 34 கனிமங்களில் 22 உக்ரைனில் கிடைக்கிறது. உலகில் அதிகமான அரிய வகை கனிமங்கள் கொட்டி கிடக்கும் நாடுகளில் சீனா முதலிடத்தில் உள்ளது. இங்கு, 44 மில்லியன் டன் கனிம வளங்கள் பிரேசில் 21 மில்லியன் டன்களுடனும் இந்தியா 6.9 மில்லியன் டன்களுடன் அடுத்தடுத்த இடத்தில் உள்ளனர். அரிய வகை கனிமங்களை அமெரிக்கா சீனாவிடத்தில் இருந்துதான் 70 சதவிகிதம் இறக்குமதி செய்து வருகிறது . அதனாலேயே, உக்ரைன் கனிமவளங்களை குறி வைத்து அமெரிக்கா செயல்பட்டு வருகிறது.Zelenskyy why don’t you wear a suit?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share