ஜாஹீர் ஹுசைன் காலமானார்… உறுதி செய்த குடும்பத்தினர்!

Published On:

| By christopher

Zakir Hussain has passed away... Family confirms!

இந்தியாவைச் சேர்ந்த பிரபல தபேலா கலைஞரான ஜாகீர் ஹுசைன் காலமானார் என நேற்று இரவு முதல் தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அதனை அவரது இறப்பை குடும்பத்தினர் இன்று (டிசம்பர் 16) காலை உறுதிப்படுத்தினர்.

உலகளவில் உயரிய விருதுகளை வென்றவரான பிரபல தபேலா கலைஞர் ஜாகீர் ஹுசைன். (வயது 73). இதயம் தொடர்பான பிரச்சனைகள் காரணமாக கடந்த 2 வாரமாக சான் பிரான்சிஸ்கோவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

தகவல் தவறானது!

இதற்கிடையே நேற்று இரவு 11 மணியளவில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தகவல் வெளியானது. இதனையடுத்து அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வந்தனர்.

எனினும் ஜாகீர் ஹுசைன் மறைந்ததாக வெளிவந்த தகவல் தவறானது என்று அவரது மருமகன் அமீர் ஆலியா நேற்று தனது எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்தார்.

அதில், ‘நான் ஜாகீர் உசேன் மருமகன். அவர் இறக்கவில்லை. உயிருடன் இருக்கிறார். தவறான தகவல்களை வெளியிட வேண்டாம் என்று ஊடகங்களுக்கு கேட்டுக்கொள்கிறோம். உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்கள் அனைவரும் அவரது உடல்நிலைக்காக பிரார்த்தனை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்’ எனப் பதிவிட்டிருந்தார்.

ஜாகீர் ஹுசைன் குடும்பத்தினர்

உறுதி செய்த குடும்பத்தினர்!

இந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததை அவரது குடும்பத்தினர் இன்று காலை உறுதி செய்துள்ளனர். அவரது குடும்பத்தினர் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “உலகெங்கிலும் உள்ள எண்ணற்ற இசை ஆர்வலர்களால் போற்றப்படும் ஒரு அசாதாரண பாரம்பரியத்தை பல தலைமுறைகளுக்கும் எதிரொலிக்கும்படியாக ஜாகீர் ஹூசைன் விட்டுச் செல்கிறார்” என தெரிவித்துள்ளனர்.

ஆன்மா சாந்தியடையட்டும்!

இதனையடுத்து சான் பிரான்சிஸ்கோவில் உள்ள இந்திய துணைத் தூதரகம் ஹுசைனின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளது.

அதில், “புகழ்பெற்ற தபேலா கலைஞரும், பத்ம விபூஷண் விருது பெற்றவருமான உஸ்தாத் ஜாகீர் ஹுசைன் இன்று தனது 73வது வயதில் சான் பிரான்சிஸ்கோவில் காலமானார் என்பதை அறிந்து நாங்கள் மிகவும் வருத்தப்படுகிறோம். அவரது மனைவி அன்டோனியா மின்னெகோலாவுக்கு எங்கள் இதயப்பூர்வமான இரங்கலைத் தெரிவிக்கிறோம். அவரது மகள்கள், அனிசா குரேஷி (அவரது கணவர், டெய்லர் பிலிப்ஸ் மற்றும் அவர்களது மகள், ஜாரா) மற்றும் இசபெல்லா குரேஷி; அவரது சகோதரர்கள், தௌபிக் குரேஷி மற்றும் ஃபசல் குரேஷி; மற்றும் அவரது சகோதரி குர்ஷித் ஆலியா. எங்களின் எண்ணங்களும் பிரார்த்தனைகளும் அவரது குடும்பத்தினருடன் உள்ளன.

புகழ்பெற்ற தபேலா மாஸ்டர் உஸ்தாத் அல்லரகாவின் மகன், உஸ்தாத் ஜாகீர் ஹுசைன் தபேலாவின் ஒப்பற்ற தேர்ச்சிக்காக அறியப்பட்டவர் மற்றும் இசைக்கான அவரது புதுமையான பங்களிப்புகள் உலகெங்கிலும் உள்ள எண்ணற்ற நபர்களின் இதயங்களைத் தொட்டுள்ளன. அவரது பாரம்பரியம் அவரது இசை என்றும் நம்முடன் வாழும். அவரது ஆன்மா சாந்தியடையட்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகளவில் போற்றப்படும் ஜாகீர் ஹூசைன்

இந்தியாவிலும் உலக அளவிலும் புகழ் பெற்ற ஹுசைன், இந்த ஆண்டின் தொடக்கத்தில் நடந்த 66வது கிராமி விருது விழாவில் பெற்ற மூன்று விருதுகள் உட்பட, அவரது வாழ்க்கையில் மொத்தம் ஐந்து கிராமி விருதுகளைப் பெற்றுள்ளார். உலகளவில் இசைத்துறையில் உயரிய விருதாக கிராமி பார்க்கப்படுகிறது.

இசைத்துறையில் அவரது குறிப்பிடத்தக்க சேவையை பாராட்டி, 1988ல் பத்மஸ்ரீ, 2002ல் பத்ம பூஷன் மற்றும் 2023ல் பத்ம விபூஷண் ஆகியவற்றை வழங்கி இந்திய அரசு கௌரவித்துள்ளது.

இந்திய அரசின் சங்கீத நாடக அகாடமி விருதும் ஜாகீர் உசேனுக்கு வழங்கப்பட்டுள்ளது.

கிறிஸ்டோபர் ஜெமா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

”ஆதவ் அர்ஜுனா விலக வேண்டும் என்பது எங்கள் நோக்கமல்ல” : திருமா

டாப் 10 நியூஸ் : உருவாகும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி முதல் மோடி – இலங்கை அதிபர் சந்திப்பு வரை!

ஹெல்த் டிப்ஸ்: குளிரால் ஏற்படும் தொண்டை வலி… தவிர்ப்பது எப்படி?

பியூட்டி டிப்ஸ்: நகம் காக்க… நல்வழிகள்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share