மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி மிகப்பெரும் வெற்றி பெற்றுள்ளது குறித்து தனது கருத்தை ஆர்.எஸ்.எஸ். இணைப் பொதுச் செயலாளர் மன்மோகன் வைதியா வெளிப்படுத்தியுள்ளார்.
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி 303 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியமைக்கவுள்ளது. இந்நிலையில் இந்தத் தேர்தலானது இரு சித்தாந்தங்களுக்கு இடையிலான போட்டி என்று ஆர்.எஸ்.எஸ் இணைப் பொதுச் செயலாளர் மன்மோகன் வைதியா கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “2019ஆம் ஆண்டு தேர்தலில் பல்வேறு சித்தாந்தங்களைக் கொண்டவர்கள் போட்டியிட்டனர். அதில் உலகம் அறிந்த இந்து வாழ்வியல் முறையும் ஒன்று.
ஜாதி, மொழி, பிராந்தியம், மதத்தின் பெயரால் தனிப்பட்ட விருப்புகளுக்காகப் பிரிவினைவாதம் பேசும் மற்ற சித்தாந்தங்களும் இந்தத் தேர்தலில் போட்டியிட்டன. எனவே இந்தத் தேர்தல் இந்து வாழ்வியல் முறைக்கும், பிரிவினைவாத அரசியலுக்கும் இடையில் நடந்த போட்டி. தேர்தல் முடிவுகள் இந்தியா சுதந்திரம் அடைந்ததிலிருந்து தத்துவார்த்த அரசியல் பயணத்தில் இந்தியா ஒரு தீர்க்கமான கட்டத்தை எட்டியுள்ளது என்பதைக் காட்டுகிறது. நாளுக்கு நாள் பாரதத்தின் எதிர்காலம் பிரகாசமாகிறது” என்று கூறியுள்ளார்.
.
.
**
மேலும் படிக்க
**
.
. **
[ராஜ்யசபா: அன்புமணியின் அடுத்த மூவ்!](https://minnambalam.com/k/2019/05/24/9)
**
.
**
[திமுக எம்.பி.க்களின் ரகசிய புலம்பல்!](https://minnambalam.com/k/2019/05/24/30)
**
.
**
[அமேதியில் ராகுல் வீழ்ந்த பின்னணி!](https://minnambalam.com/k/2019/05/24/33)
**
.
**
[டிஜிட்டல் திண்ணை: ஆட்சியைக் கவிழ்க்க திமுக வியூகம்!](https://minnambalam.com/k/2019/05/23/167)
**
.
**
[மோடிகளை உருவாக்கும் மோடி](https://minnambalam.com/k/2019/04/11/19)
**
.
.





