தேர்தல், உலகக் கோப்பை உள்ளிட்ட நிகழ்வுகளால் இந்தியாவில் விளம்பரச் செலவுகள் இந்த ஆண்டில் 11.4 சதவிகிதம் வரையில் வளர்ச்சி காணும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
*டேன் நெட்வொர்க்* நிறுவனம் சார்பாக இந்தியாவில் விளம்பரங்களுக்காகச் செலவிடும் நடவடிக்கை தொடர்பான ஆய்வு மேற்கொள்ளப்பட்டு அதன் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, 2019ஆம் ஆண்டில் விளம்பரங்களுக்காக ரூ.69,700 கோடி வரையில் செலவிடப்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இது 11.4 சதவிகிதம் வளர்ச்சியாகும். இதற்கு முன்னர் ஜனவரி மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் விளம்பரச் செலவுகள் 10.6 சதவிகிதம் வளர்ச்சி காணும் என்று மதிப்பிடப்பட்டிருந்தது. 2018ஆம் ஆண்டில் விளம்பரச் செலவுகள் 10.8 சதவிகிதம் வளர்ச்சி கண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆண்டுக்கான விளம்பரச் செலவுகளில் டிஜிட்டல் மீடியா பிரிவில் 32.7 சதவிகித உயர்வுடன் மொத்தம் ரூ.14,410 கோடி செலவிடப்படும். இது மொத்த விளம்பரச் செலவுகளில் 21 சதவிகிதமாகும். எனினும் தொலைக்காட்சிப் பிரிவில் மேற்கொள்ளப்படும் விளம்பரச் செலவுகளுக்கான பங்களிப்பு 39 சதவிகிதமாக இருக்கும் எனவும், இதற்கான செலவுகள் ரூ.27,140 கோடியாக இருக்கும் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது. தேர்தல் பிரச்சாரத்துக்கான விளம்பரங்கள், உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான விளம்பரங்கள் போன்றவற்றால் இந்த ஆண்டில் விளம்பரச் செலவுகள் அதிகமாக இருக்கும் என்று இந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
**
மேலும் படிக்க
**
**[டிஜிட்டல் திண்ணை: ஆட்சிக் கலைப்பு- ஸ்டாலினை குறிவைக்கும் வருமான வரித்துறை!](https://minnambalam.com/k/2019/06/14/65)**
**[தினகரன் தளபதிக்கு எடப்பாடி தூது: ஜெயக்குமார் எதிர்ப்பு!](https://minnambalam.com/k/2019/06/14/51)**
**[அதிமுக: அந்த 11 பேர் குழுவில் யார் யார்?](https://minnambalam.com/k/2019/06/13/22)**
**[மூடப்படும் அருவிகள்: கேரளத்தில் பண மழை!](https://minnambalam.com/k/2019/06/14/20)**
**[பாக்கியராஜ் அணிக்கு விஜயகாந்த் ஆதரவு!](https://minnambalam.com/k/2019/06/13/44)**
�,”