மாட்டிய மருத்துவமனை… மாயமான இர்பான்!

Published On:

| By Kumaresan M

யூடியூபர் இர்பான் தன் மனைவியின் பிரசவத்தின் போது குழந்தையின் தொப்புள் கொடியை கத்தரி கொண்டு வெட்டி, அதை வீடியோவாக வெளியிட்டது  சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து, மருத்துவமனை மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்த மருத்துவமனை  10 நாட்கள் செயல்பட தடை விதிக்கப்பட்டது .  50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சுகாதாரத்துறை  அமைச்சர் மா. சுப்பிரமணியத்திடம் செய்தியாளர்கள் தவறிழைத்த  இர்பான் மீது என்ன நடவடிக்கை எடுக்க போறீங்க?  அவருக்கு என்ன தண்டனை என்று கேட்டனர். அப்போது, மா.சு  இர்பான் வெளிநாட்டில் இருப்பதால் அவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாகவும், வழக்கு பதியப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

நடிகர் நெப்போலியன் மகன் தனுஷின்  திருமணம் வரும் நவம்பர் மாதம் ஜப்பானில் நடைபெறுகிறது. அதற்காக நடிகர் நெப்போலியன் குடும்பத்தினர்  அமெரிக்காவில் இருந்து ஜப்பான் சென்றுள்ளனர்.   நெப்போலியனை அமெரிக்காவுக்கே சென்று வீடியோ எடுத்த இர்பான்,  அவருடைய மகன் திருமணத்தில் கலந்துக் கொள்ள ஜப்பான் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

மருத்துவர் அல்லாத ஒருவரை தொப்புள் கொடியை வெட்ட சொன்னதற்காக அந்த மருத்துவமனை சிக்கலில் சிக்கி தவித்து வரும் நிலையில், இர்பான் ஜாலியாக வெளிநாட்டில் சுற்றி வருகிறார் என்று நெட்டிசன்கள் கொந்தளித்துள்ளனர்.  இர்பான் தொடர்ந்து தவறு செய்து வருகிறார்   .  சிறையில் கிடந்தால்தான் புத்தி வருமென்றும் நெட்டிசன்கள் கூறுகின்றனர்.

ஏற்கனவே, சம்பவம் நடந்த  தனியார் மருத்துவமனை இருக்கும் செம்மஞ்சேரி காவல் நிலையத்தில் மருத்துவத்துறையின் இணை இயக்குனர்  இளங்கோவன் புகார் அளித்துள்ளார் .யூடியூபர் இர்பான் மீதும் இதற்கு  அனுமதி அளித்த மருத்துவர் நிவேதிதா மீதும் புகார் அளிக்கப்பட்டது. மேலும், ஆபரேசன் தியேட்டரில் அன்று பணியில் இருந்தவர்களின் விவரங்களை செம்மஞ்சேரி போலீசார் சேகரித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

எம்.குமரேசன்

தமிழக மீனவர்கள் 128 பேர் கைது… ஜெய்சங்கருக்கு ஸ்டாலின் கடிதம்!

“மகாராஷ்டிராவை கொள்ளையடிக்கும் பாஜக, ஏக்நாத் ஷிண்டே” – ஆதித்யா தாக்கரே காட்டம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share