பொய் வழக்கால் வேலைவாய்ப்பை இழந்த இளைஞர் : ரூ.8 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு!

Published On:

| By Kavi

குற்றவழக்கால் அவரது வேலைவாய்ப்புகளை இழந்த இளைஞருக்கு இழப்பீடாக 8 லட்சம் ரூபாயை தமிழக அரசு வழங்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்தது.

தஞ்சாவூர் மாவட்டம் மதுக்கூரைச் சேர்ந்த சரத்குமார் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்று தாக்கல் செய்திருந்தார். அதில், 2017 ஆம் ஆண்டுவழிப்பறி நோக்குடன் பதுங்கியிருந்ததாக மதுக்கூர் காவல்துறையினர் என் மீது வழக்குப் பதிவு செய்திருந்தனர். ஆனால், இந்த வழக்கில் கடந்த 8 ஆண்டுகளாக காவல்துறையினர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை.

ADVERTISEMENT

இதன் காரணமாக வழக்கு தொடர்ந்து நிலுவையில் இருந்து வந்துள்ளது. இதனால், அரசு மற்றும் தனியார் துறைகளில் வேலை தேடியபோது, தனக்குக் கிடைத்த பல்வேறு வேலைவாய்ப்புகளை இழந்தேன். அரசு வேலைக்கான பின்னணிச் சரிபார்ப்பில் இந்த வழக்கு ஒரு தடையாக இருந்தது’ என்று தெரிவித்தார்.

இந்த மனுவை இன்று (நவம்பர் 26) விசாரித்த நீதிபதி பி. புகழேந்தி, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாமல் 8 ஆண்டுகள் ஒரு வழக்கை நிலுவையில் வைத்திருந்தது மனுதாரரின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது

ADVERTISEMENT

இதுபோன்ற தாமதத்தால் ஒரு தனிநபர் தனது வாழ்க்கையை இழப்பது ஏற்றுக் கொள்ளத்தக்கது அல்ல.

எனவே, சரத்குமார் இழந்த வேலைவாய்ப்புகள் மற்றும் மன உளைச்சலுக்கு இழப்பீடாக தமிழக அரசு 8 லட்சம் ரூபாயை 3 மாதத்தில் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

ADVERTISEMENT

மேலும், சரத்குமார் மீது பதியப்பட்டது பொய்வழக்கு என்று கூறி, அந்த வழக்கை ரத்து செய்தும் உத்தரவு பிறப்பித்தார்.

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share