தேசிய கீதம் பாட தெரியாமல் முழித்த இளைஞர்: கோவையில் கைது!

Published On:

| By Kalai

Youth did not know sing National Anthem

சார்ஜாவில் இருந்து கோவைக்கு விமானத்தில் வந்த சந்தேகத்திற்குரிய இளைஞரை தேசியகீதம் பாடச் சொன்னபோது அவர் முழித்ததால், இளைஞரை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு G 9413 விமானம் வந்திருக்கின்றது. இதில் ஏராளமான பயணிகள் பயணித்து கோயமுத்தூர் வந்திருக்கின்றனர்.

ADVERTISEMENT

அப்போது வந்த ஒரு இளைஞர் மீது குடியுரிமைத்துறை பிரிவு அதிகாரிகளுக்கு பலத்த சந்தேகம் எழுந்துள்ளது. இளைஞரை பிடித்த அதிகாரிகள் கடவு சீட்டை வாங்கி சோதித்திருக்கின்றனர்.

அதில் மேற்கு வங்க முகவரி இருந்துள்ளது. ஆனாலும் அதிகாரிகளுக்கு சந்தேகம் குறைந்த பாடில்லை. உடனடியாக அந்த இளைஞரை தேசிய கீதம் பாட சொல்லியிருக்கின்றனர்.

ADVERTISEMENT

ஆனால் தேசிய கீதம் பாடாமல் அந்த இளைஞர் திகைத்து நின்றிருக்கின்றார். இதனால் சந்தேகம் அடைந்த அதிகாரிகள் பீளமேடு காவல் நிலைத்துக்கு தகவல் தந்திருக்கின்றனர்.

பீளமேடு போலீஸார் விமான நிலையத்துக்கு சென்று அந்த நபரை பிடித்து வந்தனர். விசாரணையில் அவர் பெயர் அன்வர் உசைன் என்பது தெரியவந்தது.

ADVERTISEMENT

பங்களாதேசில் உள்ள மைமென்சிங் மாவட்டத்தின் பால்பூர் என்ற கிராமத்தை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. இந்த நிலையில் அந்த இளைஞரிடம் க்யூ பிரான்ச் உள்ளிட்ட காவல் பிரிவு அதிகாரிகள் தீவிர விசாரணையில் ஈடுபட்டிருக்கின்றனர்.

சார்ஜாவிலிருந்து வந்த இளைஞர் மீது 14-சி ஃபாரினர் ஆக்ட், 12(1ஏ) (ஏ) பாஸ்போர்ட் ஆக்ட்டின் கீழ் வழக்கு பதிந்த போலீஸார் போலி பாஸ்போர்ட் மூலம் வந்தாரா ?

வந்ததன் நோக்கம் என்ன ? பங்களாதேஷ் இளைஞர் பின்னணி என்ன என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கலை.ரா

ஈவிஎம் மிஷின்கள் சரியாக இருக்கிறதா?: ஈரோட்டில் மாதிரி வாக்குப்பதிவு!

43 ஆயிரத்தை நெருங்கிய தங்கம் விலை!

Photo of author
Kalai
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Comments are closed.

Share