பெரம்பலூர் போலீசாருக்கு அதிர்ச்சி- 8 கிலோ கஞ்சாவுடன் சிக்கிய இளைஞர்!

By Mathi

|

Published on 31 May 2026, 6:32 AM

Perambalur Police

பெரம்பலூரில் 8 கிலோ கஞ்சாவுடன் சதீஷ் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். சதீஷுக்கு கஞ்சா சப்ளை செய்த நெட்வொர்க் குறித்து கலால் போலீசார் துருவி துருவி விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெரம்பலூர் பகுதியில் பள்ளி, கல்லூரிகள் ஏராளமாக இயங்கி வருகின்றன. இப்பகுதியில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் அதிகமாக விற்பனையாவதாக கிடைத்த புகார்களைத் தொடர்ந்து போலீசார் அதிரடி சோதனைகளை மேற்கொண்டு வந்தனர்.

ADVERTISEMENT

இந்த சோதனையில் பெரம்பலூர் நகரில் 8 கிலோ கஞ்சாவுடன் சதீஷ் என்ற இளைஞர் சிக்கினார். அன்னமங்கலத்தைச் சேர்ந்த சதீஷுக்கு கஞ்சா சப்ளை செய்த நெட்வொர்க் குறித்து கலால் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Mathi

மா.ச.மதிவாணன் (Mathivanan Maran- Mathi) 30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel