ADVERTISEMENT

வாழ்த்திய கமல் : மகிழ்ச்சியில் ஷங்கர்

Published On:

| By Jegadeesh

‘இந்தியன்’ படத்தின் அடைமொழியுடன் நடிகர் கமல் சொன்ன வாழ்த்துக்கு இயக்குநர் ஷங்கர் பதிலளித்துள்ள விதம் ரசிகர்களைக் கவர்ந்துள்ளது.

1993-ம் ஆண்டு வெளியான ‘ஜென்டில்மேன்’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குநராக அறிமுகமானார் ஷங்கர். தொடர்ந்து பல்வேறு வெற்றிப் படங்களை கொடுத்தவர், இறுதியாக ரஜினியை வைத்து எந்திரன் ‘2.0’ படத்தை இயக்கினார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

பிரமாண்ட இயக்குநர் என பெயர் பெற்ற ஷங்கர் தனது 59-வது பிறந்த நாளை இன்று (ஆகஸ்ட்17)கொண்டாடுகிறார்.அவருக்கு திரையுலகினர் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

தற்போது, தெலுங்கில் ராம்சரணுடன் இணைந்து ஆர்.சி 15 படத்தை இயக்கி வரும் ஷங்கர் இப்படம் முடிந்த பின், விரைவில் இந்தியன் 2 படத்தை இயக்கவுள்ளார்.

ADVERTISEMENT


இப்படத்தின் ஹீரோ கமல் ஹாசன், ஷங்கரின் பிறந்த நாளை முன்னிட்டு தனது ட்விட்டர் பதிவில், ‘இந்தியன்’ என்பதில் பெருமிதம் கொள்வோம்; இணைந்தே இன்னும் பல சாதனைகள் செய்வோம்! பிரமாண்ட திரைப்படங்களால் இந்தியாவையே திரும்பிப் பார்க்கச் செய்த இயக்குனர் ஷங்கர் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் எனப் பதிவிட்டுள்ளார்.

அதற்கு இயக்குநர் ஷங்கர், ‘நிச்சயமாக ‘இந்தியரே’ என் பிறந்தநாளை சிறந்த நாளாக்கியது உங்கள் வாழ்த்து மிக்க நன்றி” என பதிலளித்துள்ளார்.

ADVERTISEMENT

மு.வா.ஜெகதீஸ் குமார்

ஷங்கர்-சுபாஷ்கரன்: மனக்கசப்பு மறஞ்சிருச்சா?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share