ADVERTISEMENT

அக்கவுண்ட் லாக் ஆனதாக வரும் எஸ்எம்எஸ்: உண்மை நிலை என்ன?

Published On:

| By Kavi

பாரத ஸ்டேட் வங்கிஅக்கவுண்ட் லாக் ஆனதாக வரும் எஸ்எம்எஸ்ஸை நம்ப வேண்டாம் என்றும் இதற்கான உண்மை நிலை குறித்தும் மத்திய அரசின் பத்திரிகை தகவல் மையம் (PIB) புதிய தகவல் ஒன்றை விடுத்துள்ளது.

பாரத ஸ்டேட் வங்கி பயனர்களின் அக்கவுண்ட் முடக்கப்பட்டு விட்டதாக கூறும் குறுந்தகவல் பலருக்கும் அனுப்பப்பட்டு வருகிறது.

ADVERTISEMENT

சந்தேகத்திற்குரிய பரிமாற்றம் நடைபெற்றதால், வங்கிக் கணக்கு முடக்கப்பட்டு இருப்பதாக அந்தத் தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த குறுந்தகவலுடன் இணைய முகவரி ஒன்றும் இணைக்கப்பட்டு இருக்கிறது. அதை க்ளிக் செய்யும்போது திறக்கும் மற்றொரு வலைதளம் பயனர்களிடம் சில வழிமுறைகளைப் பின்பற்றி அக்கவுண்ட்டை அன்லாக் செய்யக் கோருகிறது.

ADVERTISEMENT

இந்தத் தகவல் ஏராளமானோருக்கு பரவி வருவதை அடுத்து மத்திய அரசின் பத்திரிகை தகவல் மையம் (PIB) எச்சரிக்கை தகவல் விடுத்துள்ளது. மேலும் அந்த தகவல் போலியான ஒன்று எனத் தெரிவித்து இருக்கிறது.

“எஸ்பிஐ சார்பில் அனுப்பப்பட்டதாக கூறும் குறுந்தகவல், பயனரின் அக்கவுண்ட் தற்காலிகமாக லாக் செய்யப்பட்டு இருப்பதாக குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

ADVERTISEMENT

இதுபோன்று வங்கி கணக்கு விவரங்களை கேட்கும் மின்னஞ்சல் / எஸ்எம்எஸ்ஸுகளுக்கு பதில் அனுப்ப வேண்டாம்.

இது போன்ற குறுந்தகவல்களை உடனடியாக report.phishing@sbi.co.in முகவரியில் தெரிவிக்க வேண்டும்” என்று PIB ட்விட்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது போன்ற வலைதள முகவரிகளை க்ளிக் செய்யும்போது உங்களின் தனிப்பட்ட விவரங்களை இயக்குவதற்கான வசதியை ஹேக்கர்கள் பெற்றுக் கொள்ளும் வாய்ப்புகள் அதிகம்.

இதன் மூலம் உங்களின் வங்கிக் கணக்கில் இருந்து பணம் திருடு போகவும், தனிப்பட்ட விவரங்களை இழக்கவும் நேரிடும்.

இதுபோன்ற வலைதள முகவரிகளை க்ளிக் செய்யும்போது, ஹேக்கர் உங்களது அக்கவுண்டை இயக்குவதற்கான வசதியை பெற்றிடுவர் என்பது நினைவுகூரத்தக்கது.

கள்ளச்சாராய வழக்கில் பாஜக நிர்வாகி கைது!

டிஜிட்டல் திண்ணை: கர்நாடக பாஜக தோல்வி… மா. செ‌‌.க்கள் கூட்டத்தில் எடப்பாடி ரியாக்ஷன்!

ராஷ்மிகா குறித்த சர்ச்சை கருத்து: ஐஸ்வர்யா ராஜேஷ் விளக்கம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share