ADVERTISEMENT

உங்களுக்கு 40 வயது ஆகிடுச்சா? இந்த 5 பழக்கங்களை உடனே நிறுத்துங்க..

Published On:

| By Santhosh Raj Saravanan

Your Age is 40 and above immediately stop those 5 Habits health tips

40 வயது ஆனவர்கள் உடனடியாக நிறுத்த வேண்டிய 5 விஷயங்கள் குறித்து விரிவாக பார்ப்போம்.

ADVERTISEMENT

இளம் வயதில் சுறுசுறுப்பாக இயங்கினாலும் வயது ஆக ஆக நமது செயல்பாட்டிற்கு உடல் எதிர்வினையாற்றுவது மாறிக்கொண்டே இருக்கும். குறிப்பாக 40 வயதுக்கு மேல் என்பது ஒரு எச்சரிக்கை மணியாகவே நமக்கு உள்ளது. 40 வயதிற்கு மேல்தான் இதய பாதிப்பு, சர்க்கரை நோய், எலும்பு தேய்மானம் உள்ளிட்ட ஆபத்துகளை எதிர்நோக்க வேண்டியுள்ளது. அதனால் 40 வயது ஆகிவிட்டால் குறிப்பிட்ட காலத்திற்கு ஒரு முறை முழு உடல் பரிசோதனை செய்துகொள்வது நல்லது என மருத்துவர்கள் பரிந்துரை செய்கிறார்கள்.

ADVERTISEMENT

எந்த வயதிலும் உங்கள் உடல்நலனை கவனித்துக்கொள்வது என்பது அவசியம். 40 வயது வரை முறையற்ற உணவுப் பழக்கம், சரியான தூக்கமின்மை, மன அழுத்தம் என உடல்நலனில் கவனம் செலுத்தாமல் இருந்துவிட்டாலும், இனியாவது உடல்நலனுக்கு கொஞ்சம் அக்கறை எடுத்துக்கொள்ளுங்கள். உங்கள் ஒருநாளின் வழக்கை மாற்றிவைத்து உடல்நலனுக்கு முக்கியத்துவம் கொடுங்கள். 40 வயதுக்குப் பிறகு நீங்கள் செய்ய வேண்டிய முக்கியமான 4 விஷயங்களை மருத்துவ நிபுணர்கள் பட்டியலிட்டுள்ளனர்.

1) தூக்கத்தை தவிர்க்கக் கூடாது

ADVERTISEMENT

40 – 60 வயது கொண்டவர்கள் ஒவ்வொரு நாள் இரவும் குறைந்தது 7 முதல் 9 மணி நேரம் வரை கண்டிப்பாக உறங்க வேண்டும். அது ஹார்மோன் சமநிலையை பராமரிக்க உதவுவதோடு, உடலின் செயல் திறனை அதிகரிக்கிறது. 7 மணி நேரத்திற்கு குறைவாக உறங்குபவர்களுக்கு டைப் 2 வகை நீரிழிவு நோய் வருவதற்கான ஆபத்து 9 சதவிகிதம் அதிகரிகமாக உள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன. போதுமான உறக்கம் இல்லாதபோது வயிற்றில் கொழுப்பு சேர்ந்து அது உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை பலவீனப்படுத்துகிறது.

6 மணி நேரத்திற்கும் குறைவாக உறங்கும்போது மூளைக்கு அதிகமாக வயதாகிறது. அதேபோல 65 வயதில் டிமென்ஷியா எனப்படும் மறதிநோய் வருவதற்கு 30 சதவிகிதம் வாய்ப்புகள் உள்ளன. 40 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு சரியான உறக்கம் இல்லை என்றால் இதய நோய், பக்கவாதம் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. போதுமான நேரம் உறக்கும்போது ஆரோக்கியமான ரத்த அழுத்தம் சரியான அளவில் பராமரிக்கப்படுகிறது. அத்துடன் வயது தொடர்பான உடல்நலப் பிரச்னைகளில் இருந்து பாதுகாக்கிறது.

ADVERTISEMENT

2) தினமும் உடற்பயிற்சியை புறக்கணிக்கக் கூடாது

40 வயதிற்குப் பிறகு நாள்தோறும் உடற்பயிற்சிகளை புறக்கணிக்கவே கூடாது. 40 வயது தொடங்கி உடற்பயிற்சிகள் எதுவும் செய்யாவிட்டால் ஒவ்வொரு பத்து ஆண்டுகளிலும் 3 – 5 சதவிகித தசைகளை நம் உடல் இழக்கிறது. வாரத்திற்கு இரண்டு முறை உடற்பயிற்சி செய்தால் எலும்பு அடர்த்தியை சரியாக பராமரிக்க முடியும். இதனால் தசைகள் வலிமை பெறுவதோடு, மெட்டபாலிசமும் அதிகரிக்கிறது. 40 வயதுக்கு மேல் தொடர்ச்சியாக உடற்பயிற்சி செய்வது இதய நோய் வருவதற்கான அபாயத்தை 17% குறைக்கிறது. எளிமையாக எடையுடன் உடற்பயிற்சி செய்தால் கூட உடல் வலிமையாகும். பளு தூக்குதல் மற்றும் எடை தூக்கி உடற்பயிற்சிகள் செய்யும்போது தசைகள் வலிமை பெறுகிறது. நடுத்தர வயது பளு தூக்குபவர்கள் மூட்டு வலியிலிருந்து பாதுகாக்கும் அதே வேளையில், கார்டியோ பயிற்சிகளில் கவனம் செலுத்துபவர்களை விட வேகமாக வலிமை அதிகரிப்பை அடைகிறார்கள்.

3) பொறித்த பதப்படுத்தப்பட்ட உணவு சாப்பிடுவதை நிறுத்துங்கள்

சிப்ஸ் உள்ளிட்ட பதப்படுத்தப்பட்ட உணவுகளை சாப்பிடுவது 40 வயதுக்கு மேல் உள்ள பாதிக்கு மேற்பட்டவர்களுக்கு உடல் எடை பருமனுக்கு வழிவகுக்கும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். இந்த உணவுகளை உட்கொள்வது இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கிறது. இது மற்ற உணவுகள் சாப்பிடுவதை விட பதப்படுத்தப்பட்ட உணவு சாப்பிடுபவர்களுக்கு இதய செயலிழப்பு அபாயத்தை 2 மடங்கு அதிகரிக்கிறது. தினமும் பொறித்த, வறுத்த ஸ்நாக்ஸ்களை சாப்பிடுவது உடல் எடை அதிகரிப்புக்கு வழிவகுக்கும்.

இந்த வகை உணவுகளில் நார்ச்சத்துக்கள் இல்லாததால் குடல் ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது, பெருங்குடல் புற்றுநோயின் அபாயத்தை 20 சதவிகிதம் அதிகரிக்கிறது. நடுத்தர வயதில் அதிகமாக பதப்படுத்தப்பட்ட உணவுகளை எடுப்பது அறிவாற்றல் வீழ்ச்சிக்கும் வழிவகுக்கிறது. நட்ஸ் மற்றும் பழங்களை சிற்றுண்டியாக எடுத்துக்கொள்வது நீரிழிவு நோய்க்கான அபாயத்தை 25 சதவிகிதம் குறைக்கிறது. பதப்படுத்த உணவுகளை தவிர்த்து வழக்கமாக நாம் சாப்பிடும் உணவுகள் உடலுக்கு நீடித்த ஆற்றலை வழங்கின்றன.

4) உடல் பரிசோதனை செய்ய நோய் வரும் வரை காத்திருக்காதீர்கள்

நோய்க்கான அறிகுறிகள் இல்லாவிட்டாலும், மக்கள் வழக்கமான உடல் பரிசோதனைகளை செய்ய வேண்டும்.
40 வயதிற்குப் பிறகு வழக்கமான இரத்த பரிசோதனை செய்வதன் மூலம் கொழுப்பு அதிகரிப்பு மற்றும் ப்ரீ டயபட்டிக் உள்ளிட்ட மறைக்கப்பட்ட உடல்நலப் பிரச்சினைகளை கண்டறிய முடியும். தைராய்டு செயல்பாடு, வைட்டமின் டி அளவை ஆண்டுதோறும் கண்காணிப்பது ஆகியவை நாள்பட்ட நோய்களை 30 சதவிகிதம் தடுக்க உதவுகிறது. நீங்கள் மன அமைதி, உடல் ஆரோக்கியத்துடன் இருக்க வருடந்தோறும் உடல் பரிசோதனை செய்துகொள்ளுங்கள்.

ஆரோக்கியமாக உள்ளவர்கள் ஒவ்வொரு 1 முதல் 3 வருடங்களுக்கு ஒருமுறை கொழுப்புச் சத்து மற்றும் குளுக்கோஸ் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும். ரத்த பரிசோதனைகள் ஆரம்பகால நோயை கண்டறிகின்றன. இது இதய செயலிழப்புகளை 20 சதவிகிதம் குறைக்க உதவுகிறது.

5) மன அழுத்தத்தை தவிர்க்க வேண்டும்

நீண்ட காலமாக மன அழுத்தத்தில் இருப்பது 40 வயதிற்குப் பிறகு இரத்த அழுத்தம் அதிகரிப்பதற்கும் டைப் 2 வகை நீரிழிவு நோய் அபாயத்திற்கும் 45 சதவிகிதம் வழிவகுக்கிறது. நாள்பட்ட மன அழுத்தத்தை அனுபவிக்கும் போது நினைவாற்றலுக்கு காரணமான மூளைப் பகுதிகளின் செயல்பாடு குறைகிறது. இதன் விளைவாக பதட்டம் அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது.

மன அழுத்தமும், மோசமான தூக்கமும், உணவுப் பழக்கமும் இணைந்து, பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை 22% அதிகரிக்கிறது. நடைபயிற்சி மற்றும் தியானம் ஆகியவை மன அழுத்த அளவைக் குறைக்க உதவுகிறது, இதன் விளைவாக இதயம் தொடர்பான பிரச்னைகள் குறைக்கின்றன. நடுத்தர வயதில் மன அழுத்தத்தை நிர்வகிப்பது ஆயுட்காலத்தை நீட்டிக்கவும் உதவுகிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share