தனிமைப்பட்டுப் போவீர்கள் : மோடிக்கு ஸ்டாலின் எச்சரிக்கை!

Published On:

| By Kavi

பழிவாங்குவதில் குறியாக இருந்தால்  தனிமைப்பட்டுப் போவீர்கள் என்று பிரதமர் மோடியை குறிப்பிட்டு முதல்வர் ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.

ஒன்றிய நிதிநிலை அறிக்கையில் ஒருசில மாநிலங்கள் தவிர தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டிருப்பதை கண்டித்து இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் இன்று (ஜூலை 24) நாடாளுமன்றத்தில் போராட்டம் நடத்தினர்.

இதுதொடர்பான வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின், “தேர்தல் முடிந்துவிட்டது, இனி நாட்டைப் பற்றியே சிந்திக்க வேண்டும் என்று சொன்னீர்கள். ஆனால், நேற்றைய பட்ஜெட் உங்கள் ஆட்சியைக் காப்பாற்றுமே தவிர, இந்திய நாட்டைக் காப்பாற்றாது!

அரசைப் பொதுவாக நடத்துங்கள். இன்னமும் தோற்கடித்தவர்களைப் பழிவாங்குவதில் குறியாக இருக்க வேண்டாம்.

அரசியல் விருப்பு வெறுப்புகளுக்கேற்ப அரசை நடத்தினால், தனிமைப்பட்டுப் போவீர்கள்” என்று பிரதமர் மோடியை குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார்.

முன்னதாக பட்ஜெட் குறித்து முதல்வர் ஸ்டாலின், “மொத்தத்தில் தமிழ்நாட்டின் நலன் முழுமையாக வேண்டுமென்றே புறக்கணிக்கப்பட வேண்டும் என்பது போல் இந்த நிதிநிலை அறிக்கை அமைந்துள்ளது. தமிழக மக்கள் இவ்வாறு வஞ்சிக்கப்படுவது இந்திய நாட்டின் கூட்டாண்மைத் தத்துவத்திற்கு எதிரானது.தமிழ்நாடு அரசு கோரியுள்ள பல்வேறு திட்டப்பணிகளுக்கான நிதி ஒதுக்கீடுகளை மாநிலத்திற்கு வழங்கிட வேண்டும்” என்று வலியுறுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

செந்தில் பாலாஜியிடம் இருந்து கைப்பற்றப்பட்ட பென் டிரைவ் : அமலாக்கத் துறைக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி!

‘தமிழ்நாடு’ பெயர் இடம்பெற 25 எம்.பி.க்களை கொடுத்தீங்களா?: அன்புமணி கேள்வி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Comments are closed.

Share