ஒரே நாளில் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் ’யோக்கியன்’

Published On:

| By Monisha

yokkiyan movie releasing on tomorrow on theatre and ott

மூன் ஸ்டார் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் வி.மாதேஷ் தயாரித்திருக்கும் படம் ‘யோக்கியன்.

இதில் ஜெய் ஆகாஷ் தந்தை, மகன் என இரட்டை வேடத்தில் நடித்திருக்கிறார். கதாநாயகிகளாக கவிதா, ஆர்த்தி சுரேஷ், குஷி மற்றும் சாம்ஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ADVERTISEMENT

சாய் பிரபா மீனா இயக்கும் இந்த படத்திற்கு, பால் பாண்டி ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ஜூபின் இசையமைக்கிறார். சாய் பிரபா மீனா, ஜெய் ஆகாஷ் இயக்கிய படத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றியிருக்கிறார்.

இந்த ‘யோக்கியன்’ படம் நாளை (ஜூலை 28) திரையரங்குகளிலும், ‘A கியூப் மூவிஸ் ஆப்’ (A qube Movies App) என்ற ஒ.டி.டி. தளத்திலும் ‘யோக்கியன்’ படம் வெளியாகிறது.

ADVERTISEMENT

இது குறித்து ‘யோக்கியன்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் படத்தின் நாயகனான நடிகர் ஜெய் ஆகாஷ் பேசும்போது,

“ஒரே நேரத்தில் தியேட்டரிலும், ஒ.டி.டி.யிலும் எங்களது ‘யோக்கியன்’ படம் வரும் ஜூலை 28-ம் தேதி வெளியாகிறது. அதுவும் என்னுடைய சொந்த ஓடிடி தளமான ‘ஏ கியூப் மூவிஸ்’ என்ற ஓடிடி தளத்தில்தான் வெளியாகிறது.

ADVERTISEMENT

என்னிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய சாய் பிரபா மீனா இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார். இந்தப் படத்தில் நான் தந்தை, மகன் என இரட்டை வேடத்தில் நடித்திருக்கிறேன்.

எந்தவொரு படமும் மக்களிடம் கொண்டு சென்று சேர்வதற்கு தியேட்டர்கள் தேவை. ஆனால், இப்போது தியேட்டருக்கு ரசிகர்கள் பெரிய ஸ்டார் படங்கள், பெரிய பேனர் படங்களை மட்டுமே பார்க்க வருகிறார்கள். சிறிய படங்களை தியேட்டர்காரர்கள் திரையிட மறுக்கிறார்கள்.

மக்களும் வந்து பார்க்க ஆர்வம் காட்டுவதில்லை. அதனால் தியேட்டர்காரர்களையும் நாம் குற்றம் சொல்ல முடியாது. தற்போதைய நிலைமை இதுதான்.

இதனால்தான் நான் சொந்தமாக ஓடிடி தளத்தைத் துவக்கியுள்ளேன். இப்போது அமேசான், நெட் பிளிக்ஸ் போன்ற ஓடிடி தளங்களில் படங்களை பார்த்து வருகிறார்கள். அதில் மாத சந்தா கட்ட வேண்டும். ஆனால் எங்களுடைய ‘ஏ.கியூப் மூவிஸ்’ ஓடிடி தளத்தில் மாத சந்தா இல்லை.

இந்த ‘ஏ கியூப் ஓடிடி ஆப்பை’ ஆண்ட்ராய்ட் போனாக இருந்தால் பிளே ஸ்டோரிலும், ஆப்பிள் போனாக இருந்தால் ஆப் ஸ்டோரிலும் இலவசமாக டவுன்லோடு செய்து கொள்ளலாம். அதில் படத்தின் டிரெய்லர் வரும். அது பிடித்திருந்தால் 50 ரூபாய் மட்டும் கட்டி இந்த ‘யோக்கியன்’ படத்தை பார்க்கலாம். ஒரு நாள் முழுவதும் இப்படத்தை பார்க்க முடியும்.

ரசிகர்களுக்கு வசதியான நேரத்தில். உலகின் எந்த மூலையிலிருந்தும் வீட்டிலிருந்தபடியே டிவியிலும் இதை கனெக்ட் செய்து பார்க்க முடியும். இதனால் மக்களுக்கு நேரம் மற்றும் தியேட்டருக்கு சென்றால் ஏற்படும் இதர செலவுகளையும் மிச்சம் செய்யலாம்.

இப்போது ‘A கியூப் ஆப்’பிள் 3 லட்சம் பேர் சந்தாதாரர்களாக இருக்கிறார்கள். இதனால் படத்தின் மூலம் அசல் தவிர லாபமும் தயாரிப்பாளருக்கு கிடைக்கும். தற்போதைக்கு ‘ஏ கியூப் ஆப்’பிள் வெளியிடுவதற்கு என்னுடைய 3 படங்கள் தயாராக உள்ளன.

படம் எடுத்துவிட்டு தியேட்டர் கிடைக்காமல் இருப்பவர்கள் தங்கள் படங்களை ‘ஏ கியூப் ஆப்’பில் வெளியிடலாம். அவர்களுக்கு முறையான கணக்கு வழங்கப்படும். அத்துடன் 80 சதவீத வருமானம் அளிக்கப்படும். 20 சதவீதம் மட்டுமே ஆப்பிற்காக பிடித்தம் செய்யப்படும்.

சினிமாவில் நான் நடித்துப் பெற்ற பெயரைவிட ஜீ தமிழ் டிவியில் ஒளிபரப்பாகும் ‘நீதானே என் பொன் வசந்தம்’ என்ற டி வி சீரியலில் நடித்ததன் மூலம் அதிக பிரபலம் ஆகிவிட்டேன். அதனால் அவ்வளவு ரசிகர்களும் என் படத்தை பார்க்க ஆவலாக உள்ளனர்.

குறைந்தளவு தியேட்டர்களில் தான் படம் வெளியாகிறது. தியேட்டரில் படத்தை பார்க்க முடியாவிட்டால் ‘ஏ கியூப் மூவிஸ்’ ஓடிடி தளத்தில் எங்களது ‘யோக்கியன்’ படத்தைப் பார்த்து ரசியுங்கள்.

ஒரு கெட்ட போலீஸ் அதிகாரியின் மகன் என்னவாகிறான் என்ற கருத்தாக்கத்தில் இப்படம் உருவாகியுள்ளது. அத்துடன் நல்ல பாடல், இசை, காட்சிகள் என கமர்ஷியல் அம்சங்களுடன் படம் வந்திருக்கிறது.

இப்போதெல்லாம் நல்லவன், கெட்டவன் ரோல்களில் பெரிய ஹீரோக்களே நடிக்கின்றனர். நானும் அப்படியொரு முயற்சியாகவே இதில் நடித்திருக்கிறேன். இனிமேல், ஹீரோவாக மட்டுமல்லாமல் வில்லனாகவும் நடிப்பேன். அனைவரும் ஆதரவு தாருங்கள்” என்று பேசினார்.

இராமானுஜம்

2வது நாளாக வேலைநிறுத்த போராட்டத்தில் என்.எல்.சி தொழிலாளர்கள்!

மீண்டும் 45 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share