அர்ஜூன் தான் நெக்ஸ்ட் கிறிஸ் கெய்ல்… பெட் கட்டிய யுவராஜ் தந்தை!

Published On:

| By Selvam

இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் தெண்டுல்கர் மகன் அர்ஜுனுக்கு, யுவராஜ் சிங் பயிற்சி கொடுத்தால், கிறிஸ் கெய்ல் போல அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று யுவராஜ் தந்தை யோக்ராஜ் சிங் தெரிவித்துள்ளார். Arjun can become next Chris

ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி அர்ஜூனை ரூ.30 லட்சம் ஏலத்திற்கு எடுத்தது. ஆல் ரவுண்டரான அர்ஜூனுக்கு அணியில் விளையாட இன்னும் வாய்ப்பு கிடைக்கவில்லை. Arjun can become next Chris

ADVERTISEMENT

முன்னதாக யுவராஜ் சிங்கின் தந்தை, யோக்ராஜ் சிங் தான் அர்ஜூனுக்கு பயிற்சி அளித்து வந்தார். இதுதொடர்பாக, CricketNext ஊடகத்திற்கு யோக்ராஜ் சிங் அளித்துள்ள பேட்டியில்,

“பந்துவீச்சில் குறைவாகவும், பேட்டிங்கில் அதிகமாகவும் கவனம் செலுத்துங்கள் என்று அர்ஜூனிடம் சொன்னேன். அர்ஜூனுக்கு யுவராஜ் சிங் மூன்று மாதம் மட்டும் டிரெய்னிங் கொடுத்தால் போதும், அவர் கிறிஸ் கெய்ல் போல வருவார். இதற்காக நான் பந்தயம் கட்டுகிறேன். அதனால், அர்ஜூனை கொஞ்ச நாட்கள் யுவராஜிடம் டிரெய்னிங் அனுப்ப வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

2024-25 விஜய் ஹசாரே டிராபியில் இரண்டு இன்னிங்ஸ்களில் விளையாடி, 40 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார் அர்ஜூன். அதேபோல, ரஞ்சி டிராபியில் மூன்று இன்னிங்ஸ்களில் விளையாடி 51 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். சமீபத்தில் நடைபெற்ற போட்டிகளில் அவர் பெரிதும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தாமல், நல்ல ஃபார்மில் இல்லை என்றே கிரிக்கெட் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share