ஜி.வி.பிரகாஷுக்கு கதை எழுதும் யோகி பாபு

Published On:

| By Monisha

Yogi Babu turns scriptwriter for GV Prakash

தமிழ் சினிமாவில் இன்று மிக பிஸியான நகைச்சுவை நடிகர் என்றால் அது நடிகர் யோகி பாபு தான். நகைச்சுவை நடிகராக மட்டும் இல்லாமல் நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து கதாநாயகனாகவும் நடித்து பல வெற்றிகளைக் குவித்து வருகிறார் நடிகர் யோகி பாபு.

தற்போது நகைச்சுவை நடிகர், கதாநாயகன், துணை நடிகர் என்ற லெவலை தாண்டி கதாசிரியராக புது அவதாரம் எடுத்திருக்கிறார் யோகி பாபு.

ADVERTISEMENT

சமீபத்தில், ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாக உள்ள அவரது 25வது படத்தின் டைட்டிலை உலகநாயகன் கமல்ஹாசன் வெளியிட்டார். கிங்ஸ்டன் என்று பெயரிடப்பட்டுள்ள அந்தப் படத்தை அறிமுக இயக்குனர் கமல் பிரகாஷ் இயக்குகிறார். இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக நடிகை திவ்யபாரதி நடிக்கிறார். Parallel Universe pictures நிறுவனம் சார்பில் ஜி.வி.பிரகாஷ், Zee studios நிறுவனத்துடன் இணைந்து இந்த படத்தை தயாரிக்கிறார்.

இந்த படத்தின் டைட்டில் வெளியானதிலிருந்து பலரும் ஜி.வி.பிரகாஷுக்கு தங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றார்கள்.

ADVERTISEMENT

இந்நிலையில் கிங்ஸ்டன் படத்தில் ஜி.வி.பிரகாஷுடன் இணைந்து நடிக்கும் யோகி பாபு ஜி.வி.பிரகாஷை வாழ்த்தியதுடன் ஒரு அப்டேட்டையும் வெளியிட்டு இருக்கிறார்.

ADVERTISEMENT

யோகி பாபுவின் பதிவில், ”நீங்கள் தயாரிப்பாளராக அறிமுகமாகும் இந்த படம் வெற்றி பெற்று, ஓர் மறக்க முடியாத படமாக அமைய எனது வாழ்த்துக்கள். அடுத்ததாக உங்கள் தயாரிப்பில் நீங்கள் ஹீரோவாக நடிக்கப் போகும் அந்த இரண்டாவது படத்தில் நானும் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறேன். அதற்கு ஒரு கதாசிரியராக கதை எழுதிக் கொண்டிருக்கிறேன். அந்த இரண்டாவது படத்திற்கும் ஆல் தி பெஸ்ட்” என்று யோகி பாபு தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

வாட்ஸ் அப்பில் மின்னம்பலம் செய்திகளை படிக்க… இங்கே க்ளிக் செய்யவும்!

– கார்த்திக் ராஜா

அறிஞர் அண்ணா மிதிவண்டிப் போட்டி: கலந்துகொள்வது எப்படி?

ODI 2023: டி காக் அதிரடி… ஆஸ்திரேலியா மீண்டும் படுதோல்வி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share