’வானவன்’: யோகி பாபுவின் பர்த்டே ஸ்பெஷல்!

Published On:

| By Monisha

yogi babu in vaanavan motion poster is released

நடிகர் யோகி பாபுவின் பிறந்தநாள் ஸ்பெஷலாக அவர் நடிக்கும் வானவன் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான லொள்ளுசபா நிகழ்ச்சியில் நடித்து சினிமாவிற்குள் நுழைந்த யோகி பாபுவிற்கு ஆரம்ப காலத்தில் சிறந்த வரவேற்பு கிடைக்கவில்லை. இந்த நிலையில் சிவகார்த்திகேயன் நடித்த மான் கராத்தே படத்தின் மூலம் ரசிகர்களிடத்தில் பிரபலமாக தொடங்கினார்.

ADVERTISEMENT

இதனையடுத்து தமிழ் திரையுலக சினிமாவில் ரஜினி, விஜய் தொடங்கிப் பல முன்னணி நடிகர்களின் படங்களில் காமெடியனாக நடித்த யோகிபாபு கோலமாவு கோகிலா படம் மூலம் ஹீரோவாகவும் அவர் மாறினார்.

தற்போது காமெடியன், ஹூரோ என தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்துக் கொண்டிருக்கிறார். யோகி பாபுவின் நடிப்பில் கடந்த ஜூலை 14 மாவீரன் படம் வெளியான நிலையில் ஜெயிலர், ஜவான், எல்.ஜி.எம் ஆகிய படங்கள் ரிலீசுக்கு தயாராக உள்ளது.

ADVERTISEMENT

இதனிடையே தான் யோகிபாபுவின் பிறந்தநாள் சிறப்பாக இன்று அவர் நடிக்கும் அடுத்த படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது. சஜின் கே சுரேந்திரன் இயக்கும் அந்த படத்திற்கு ‘வானவன்’ என பெயரிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

முற்றிலும் வித்தியாசமாகவும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை ஆரம்பத்திலேயே அதிகரிக்கும் வகையில் வானவன் மோஷன் போஸ்டர் அமைந்துள்ளது. இந்த மோஷன் போஸ்டரை பார்க்கும் போது காடு மற்றும் காடு சார்ந்த படமாக வானவன் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படத்தில் திலக் ரமேஷ், லட்சுமி பிரியா, காளி வெங்கட் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

மோனிஷா

“ஸ்டாலினிடம் கேளுங்கள்” : தங்கம் தென்னரசுவுக்கு அதிமுக கண்டனம்!

தயாளு அம்மாள் மருத்துவமனையில் அனுமதி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share