இந்தியாவில் LGBT சமூக மக்களின் அங்கீகாரத்திற்காகவும் உரிமைகளுக்காகவும் போராட்டங்களும் விழிப்புணர்வு கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்று வருகிறது. தமிழிலும் அங்கொன்றும் இங்கொன்றுமாக அத்தகைய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தொலைக்காட்சி தொடர்களில் நடிகராக அறியப்பட்ட ராகவ் ‘டிக்கெட்’என்ற LGBT ஆதரவு படமொன்றை இயக்கி நடித்துள்ளார். இந்த படத்தை அவரது மனைவியும் நடிகையுமான ப்ரீதா தயாரித்துள்ளார். ராகவ் மற்றும் நவ்னீத் சுந்தர் இணைந்து இசையமைத்துள்ளனர். வாழ்வுக்கும் இறப்புக்குமான நிலையை விவரிக்கும் விதமாக திரில்லர் கலந்தும் இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த திரைப்படம் லண்டனில் நடைபெற்ற “லண்டன் இந்தியத் திரைப்படவிழா – 2017” (London Indian Film Festival-2017)-ல் திரையிடப்பட்டது. அங்கு பார்வையாளர்களால் பெரும் பாராட்டைப்பெற்றுள்ளது.
