ஹெல்த் டிப்ஸ்: உறக்கத்தைத் தரும் மஞ்சள் பந்து! 

Published On:

| By Kavi

மஞ்சள் நிறத்தில் இருக்கும் ஒரு ரப்பர் பந்தை அழுத்திக்கொண்டிருப்பவர்களை நம்மில் பலர்  பார்த்திருப்போம். Yellow sponge ball give sleep

இது பற்றி கேட்க தயங்கி, எதற்காக என்பது தெரியாமலே நகர்ந்திருப்போம். இந்த பந்தை எதற்காகப் பயன்படுகிறார்கள்? பொதுநல மருத்துவரிடம் விசாரித்தோம்.

“பெரும்பாலும் மன அழுத்தத்தை விரட்டவே ஸ்ட்ரெஸ் பால் (Stress Ball) எனப்படும் மஞ்சள் பந்து உபயோகிக்கப் பரிந்துரைக்கப்படுகிறது. அந்தப் பந்தை உள்ளங்கையில் வைத்து அழுத்துவதன் மூலம், உங்கள் உணர்வுகள் கட்டுப்படுத்தப்படும். உதாரணத்துக்கு, உங்கள் கோபம் தணியும், ஸ்ட்ரெஸ் குறையும்.

இவற்றைத் தாண்டி, சிலருக்கு ஸ்ட்ரெஸ் பாலை அழுத்திப் பயிற்சி செய்வதன் மூலம் நல்ல உறக்கம் வருவதுண்டு. இதன் பின்னணியில் இருப்பதும் ஸ்ட்ரெஸ்தான். அதாவது நீங்கள் ஸ்ட்ரெஸ்ஸிலோ, அதீத உணர்ச்சிவசப்பட்ட நிலையிலோ இருக்கும்போது, அதிலிருந்து கவனத்தை வேறு விஷயத்தில் திருப்பும்போது மனம் அமைதியாகும். அதனால் நல்ல உறக்கம் வரும்.

ஸ்ட்ரெஸ் பால் உபயோகிப்பதால் பாதக விளைவு ஏதும் ஏற்பட வாய்ப்பில்லை. மற்றபடி, மேற்குறிப்பிட்ட தேவை உள்ள யார் வேண்டுமானாலும் ஸ்ட்ரெஸ் பால் பயிற்சியைச் செய்யலாம், தவறே இல்லை.

மேலும், கைகளில் ஏதோ அடிபட்டுவிட்டது, அதற்கான சிகிச்சையில் இருந்து மீண்டிருக்கிறார்கள் என்ற நிலையில், அவர்களின் கைகளின் தசைகளை பலப்படுத்தவும் ஸ்ட்ரெஸ் பால் உபயோகிக்கும்படி அறிவுறுத்தப்படும். தினமும் குறிப்பிட்ட நேரம் அந்தப் பந்தை அழுத்திப் பயிற்சி செய்வதன் மூலம் தசைகள் மற்றும் மூட்டுகள் பலப்படும்” என்கிறார்கள். Yellow sponge ball give sleep

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share