கடலுக்கடியில் 2000 ஆண்டுகள் பழமையான ஹெர்குலிஸ் சிலை

Published On:

| By admin

120 ஆண்டுகளுக்கு முன்பு கிரேக்கத் தீவான ஆன்டிகிதெராவில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டது ரோமானிய காலத்து சரக்குக் கப்பல். இது உலகின் மிகப் பெரிய பழங்கால கப்பல் விபத்தாக கருதப்படுகிறது. மேலும் அதன் சமீபத்திய ஆய்வுகளில் இன்னும் அதிகமான பொக்கிஷங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

2000 ஆண்டுகள் பழமையான ஹெர்குலஸ் சிலையின் தலையையும், மனித பற்கள் போன்ற பிற கலைப்பொருட்களையும் நீருக்கு அடியில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தனர்.

இதுகுறித்து பணியை மேற்பார்வையிடும் கிளாசிக்கல் தொல்பொருள் ஆராய்ச்சியாளர் லோரென்ஸ் பாமர் கூறுகையில், “இப்பொழுது கண்டுபிடிக்கப்பட்ட பளிங்கு தலை ஹெர்குலிஸ் என்பதில் சந்தேகமில்லை. கடந்த 1900 ஆம் ஆண்டில் இதே பகுதியிலிருந்து ஹெர்குலிஸின் சிலையை கண்டுபிடித்தனர். ஒருவேளை இது அந்த சிலையின் தலையாக கூட இருக்கலாம். இதனுடன் சில கலைப் பொருட்களும் கிடைத்துள்ளன. அவை தற்போது ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.” என்று தெரிவித்தார்.

மேலும், “கடலின் அடிப்பகுதியில் உள்ள சிதைவை ஓரளவு மூடியிருந்த மூன்று கற்பாறைகளை அகற்றுவதன் மூலம் இந்த கண்டுபிடிப்புகள் சாத்தியமானது. ஹெர்குலிஸ் தலையுடன் மற்றொரு பளிங்கு சிலையின் பீடம், மனித பற்கள் மற்றும் கப்பலின் உபகரணங்களின் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த ஆராய்ச்சிக்காக ஏறக்குறைய மூன்று வாரங்களுக்கு, கடல் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் டைவர்ஸ் குழு சிறப்புப் பயிற்சி செய்தனர்.” என்று கூறினார்.

மேலும் ஆய்வு செய்த பகுதியில், கப்பல் விபத்துக்குள்ளான கடல் படிவுகளில் இரண்டு பற்கள் பதிக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மேலும் விரிவான ஆராய்ச்சிகளுக்கு பிறகு பல உண்மை தகவல்கள் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share