ஜீவாவின் ‘யாத்ரா 2’ ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

By christopher

|

Published on 7 Oct 2023, 5:37 PM

கடந்த 2019ல் தெலுங்கில் வெளியான யாத்ரா படம், மறைந்த ஆந்திர முன்னாள் முதல்வர் ராஜசேகர ரெட்டியின் வாழ்க்கையை மையாக வைத்து உருவாக்கப்பட்டிருந்தது. அந்த படத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் ராஜசேகர ரெட்டியின் கதாபாத்திரத்தை மலையாள நடிகர் மம்மூட்டி ஏற்று நடித்திருந்தார்.

Paathasala, Anando Brahma போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் மஹி வி ராகவ் யாத்ரா படத்தை இயக்கி இருந்தார். யாத்ரா படத்திற்கு நல்ல விமர்சனங்கள் கிடைத்ததால் யாத்ரா 2 படம் வெளியாகும் என்று கூறப்பட்டது.

ADVERTISEMENT

மேலும் யாத்ரா 2 படம் தற்போதைய ஆந்திரா முதலமைச்சரும், மறைந்த முன்னாள் முதல்வர் ராஜசேகர ரெட்டியின் மகனுமான ஜெகன் மோகன் ரெட்டியின் வாழ்க்கை வரலாறு படமாக உருவாக உள்ளது என்றும், இந்த இரண்டாம் பாகத்தையும் இயக்குனர் மஹி வி ராகவ் இயக்குகிறார் என்றும் அறிவிக்கப்பட்டது.

அதன் பிறகு  ஆகஸ்ட் மாதம் யாத்ரா 2 படப்பிடிப்பு தொடங்கும் என தகவல் வெளியானது. இந்த படத்தில் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி கதாபாத்திரத்தில் நடிகர் ஜீவா நடித்திருக்கிறார். யாத்ரா படத்தின் முதல் பாகத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ராஜசேகர ரெட்டி கதாபாத்திரத்தில் நடித்த மலையாள நடிகர் மம்மூட்டி இரண்டாம் பாகத்திலும் அதே கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

ADVERTISEMENT

இந்நிலையில் தற்போது யாத்ரா 2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வரும் அக்டோபர் 9ஆம் தேதி காலை 11 மணிக்கு வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

யாத்ரா 2 படத்திற்கு தெலுங்கு ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு உருவாகி இருக்கும் நிலையில், முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியாக நடிகர் ஜீவா நடித்திருப்பதால் தமிழ்நாட்டிலும் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது.

ADVERTISEMENT

கார்த்திக் ராஜா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

தொடங்கியது அமேசானின் GREAT INDIAN FESTIVAL!

ரகுமான் பெயர் சொல்லாமல்… வைரமுத்துவின் வஞ்சப்புகழ்ச்சி?

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

christopher

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel