யாஷிகாவின் வலிமை!

Published On:

| By Balaji

திரையில் தோன்றும் நட்சத்திரங்களுக்கு அவர்களின் உடலே மூலதனம், அவற்றுக்கு ஏதேனும் சேதாரம் ஏற்பட்டால் அவர்களுக்கு மட்டுமல்ல அவர் சம்பந்தப்பட்டுள்ள திரைப்படங்களும் பாதிக்கப்படும் என்பதற்கு ஏராளமான முன் உதாரணங்கள் உள்ளன. இருந்தபோதிலும் இன்றைய இளம் தலைமுறை நட்சத்திரங்கள் அதனை கவனத்தில் கொள்வதும் இல்லை கடைப்பிடிப்பதும் இல்லை என்பதற்கு நடிகை யாஷிகா ஆனந்த் சமீபத்திய உதாரணம்.

இருட்டு அறையில் முரட்டு குத்து, ஜாம்பி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள யாஷிகா ஆனந்த் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழ் ரசிகர்களிடம் பிரபலமடைந்தார். கடமையை செய் உள்ளிட்ட பல படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்து வளரும் சூழ்நிலையில் சமீபத்தில் கார் விபத்தில் சிக்கிய யாஷிகா ஆனந்துக்கு இடுப்பு, கால் பகுதிகளில் பலத்த அடிபட்டதால் ஆபரேஷன் செய்யப்பட்டு உள்ளது. இதனால் அவர் எழுந்து நடக்க 6 மாதங்களாவது ஆகும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தனது உடல்நிலை பற்றி அவ்வப்போது சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகிறார் யாஷிகா ஆனந்த்.

இந்நிலையில் டுவிட்டரில் தற்போது தான் இருக்கும் நிலை குறித்து புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார் யாஷிகா ஆனந்த். அதில் படுக்கையில் படுத்தபடியாக இரு கால்களில் பெரிய கட்டுடன் உள்ளார். எனது வலிமை என அந்தப் புகைப்படத்திற்கு தலைப்பிட்டுள்ளார் யாஷிகா ஆனந்த்.

**-இராமானுஜம்**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share