இருசக்கர வாகனப்பிரியர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற ஒரு நிறுவனம் யமஹா. அதிலும் குறிப்பாக அவர்களுடைய R1 மற்றும் R1M மாடல் இருசக்கர வாகனங்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உண்டு.
இந்தநிலையில் யமஹா யூகேவிடமிருந்து வெளிவந்துள்ள அறிக்கையில் இந்நிறுவனத்தின் மிகவும் புகழ்பெற்ற R1 மற்றும் R1M மாடல் இருசக்கர வாகனங்களின் உற்பத்தியை வரும் 2025 ஆண்டு முதல் நிறுத்தப்போவதாக அறிவித்துள்ளது.
2025 ஆம் ஆண்டில் வாகனங்களில் இருந்து வெளிவரும் புகை குறித்த கடுமையான விதிமுறைகள் அமலுக்கு வருவதால் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும், இனி வரும் தயாரிப்புகளில் எதிர்கால வாய்ப்புகளை வழங்கும் ஸ்டேட்டர்ஜிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்போவதாகவும் யமஹா நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடைசியாக 2020 ஆண்டுதான் இந்த மாடல் இருசக்கர வாகனங்கள் புதுப்பிக்கப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. யமஹா பிரியர்களுக்கு இது வருத்தமளிக்கக்கூடிய செய்தியாக இருந்தாலும் R1 மற்றும் R1M மாடல் வாகனங்களுக்கு இணையான சில வாகனங்கள் இருக்கின்றன என்பது ஆறுதலான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.
-பவித்ரா பலராமன்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பவுலிங்கில் மிரட்டிய ஷோபனா ஆஷா: RCB கடைசி பந்தில் த்ரில் வெற்றி!
உதயசூரியன் நாடு: கடல் கடந்த கலைஞரின் புகழ்!
சம்மர் ஸ்பெஷல் ஹெல்த் டிப்ஸ்: தினமும் இளநீர் பருகுவது ஆபத்தா?
கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல்.. சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது?