கொல்லப்பட்ட ஹமாஸ் தலைவர் மனைவி கையில் ரூ.26 லட்சம் மதிப்புள்ள கைப்பை!

Published On:

| By Kumaresan M

இஸ்ரேல் – ஹமாஸ் இடையே கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி போர் மூண்டது. ஒரு வருடமாகியும் அங்கு தொடர்ந்து தாக்குதல் சம்பவங்கள் நடந்துவருகின்றன. முதலில் இஸ்ரேல் – ஹமாஸ் இடையே துவங்கிய போர், பிறகு லெபனானின் ஹிஸ்புல்லா, ஈரான் என தற்போது நீண்டுள்ளது.

இஸ்ரேல் – ஹமாஸ் இடையே போர் துவங்கி கடந்த 7ம் தேதியோடு ஒரு வருடம் ஆகியுள்ளது.

சமீபத்தில் இஸ்ரேல் ராணுவம் காசாவில் நடத்திய தாக்குதலில் ஹமாஸின் முக்கிய தலைவர்களில் ஒருவரான யஹ்யா சின்வர் கொல்லப்பட்டார். இதையடுத்து, ஹமாசின் பல தலைவர்கள் தங்கள் உயிரை பாதுகாத்து கொள்ளும் முயற்சியில் இறங்கியுள்ளனர். சிலர் ஈரான் நாட்டுக்கு தப்பி விட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், சின்வர் கொல்லப்படுவதற்கு முன்பு தன் மனைவி மற்றும் குழந்தைகளுடன் சுரங்கத்துக்குள் சென்ற வீடியோ ஒன்றை இஸ்ரேல்  வெளியிட்டுள்ளது.  இந்த வீடியோவில் சின்வாரின் மனைவி கையில் வைத்திருந்த பேக்தான் இப்போது பேசு பொருளாகியுள்ளது.

அதாவது, சின்வாரின் மனைவி கையில் வைத்திருந்த பேக் Hermes Birkin ரகத்தை சேர்ந்தது என்றும் 32 ஆயிரம் யு.எஸ். டாலர்கள் விலை கொண்டது என்றும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது. அதாவது, இந்திய மதிப்பில் இந்த கை பேக்கின் மதிப்பு மட்டும் 26 லட்சம் ஆகும்.

மேலும் இஸ்ரேல் ராணுவம் கூறுகையில், காசாவில் மக்களை கஷ்டத்துக்கு உள்ளாக்கிய ஹமாஸ் தலைவர், கொஞ்சம் கூட வெக்கமில்லாமல்  தன் குடும்பத்தினரை மட்டும் சொகுசாக வாழ வைத்துள்ளார். அப்பாவி மக்கள் இறந்து கொண்டிருக்கையில் ஹமாஸ் தலைவர்கள் உல்லாச வாழ்க்கை வாழ்வதாகவும் இஸ்ரேல் குற்றம் சாட்டியுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

எம்.குமரேசன்

 அம்மாவில் நடக்கும் பிரச்னைகளை மோகன்லால் நன்கு அறிந்தவர் : நடிகை மல்லிகா சுகுமாறன்

“திமுக கூட்டணி உடையுமா?” : எடப்பாடிக்கு அமைச்சர் ரகுபதி பதில்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share