கம்ப்யூட்டர் சாஃப்ட்வர் நிறுவனமான Adobe உலகின் முன்னணி நிறுவனமாகும். ஃபோட்டோ எடிட்டிங், வீடியோ எடிட்டிங், Photoshop Adobe Illustrator என அனைத்து விதமான எடிட்டிங்கிற்கும் அதிக வசதிகள் கொண்ட சாஃப்ட்வேர்களை வெளியிட்டு வருகிறது இந்நிறுவனம். இந்நிலையில் அந்த நிறுவனம் தனது சாஃப்ட்வர்களில் voice commands ஆப்ஷனை இணைத்துள்ளது. இதன் மூலம் cropping, flipping போன்ற அனைத்து எடிட்டிங் ஆப்ஷன்களையும் எதிரில் உட்கார்ந்துகொண்டு வாயால் தேவையான கம்மென்ட்களை சொன்னால் போதுமானது. அதனை ஏற்றுக்கொண்டு வேலைகளை செய்யும்.
இதன் மூலம் எடிட்டிங் செய்யும் நேரம் மிச்சமடையும். அதுமட்டுமின்றி எடிட்டிங் செய்ய பழகுபவர்களுக்கும் இது பயனுள்ளதாக இருக்கும் என Adobe நிறுவனம் தெரிவித்துள்ளது.