ஷாருக்கானுக்கு ஒய் ப்ளஸ் பாதுகாப்பு!

Published On:

| By Kavi

Y security for Shah Rukh Khan

பாட்ஷா ஆஃப் பாலிவுட், கிங் கான் என இந்திய சினிமா ரசிகர்கள் மட்டுமின்றி உலக சினிமா ரசிகர்களாலும் கொண்டாடப்படுபவர் நடிகர் ஷாருக்கான்.

சமீபத்தில் நடிகர் ஷாருக்கானின் நடிப்பில் இயக்குனர் அட்லியின் இயக்கத்தில் வெளியான ஜவான் படம் மெகா பிளாக்பஸ்டர் ஹிட்டானது.

ஜவான் படத்திற்கு சில கலவையான விமர்சனங்கள் கொடுக்கப்பட்டாலும், இதுவரை கண்டிடாத ஓர் ஆக்சன் அவதாரில் ஷாருக்கானை கண்டவுடன் இன்று வரை ஜவான் படத்தை தொடர்ந்து கொண்டாடிக் கொண்டிருக்கின்றனர்.

உலக அளவில் 1000 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலை ஈட்டியது மட்டுமின்றி இந்தியாவில் மட்டும் 600 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது ஜவான்.

இதுவரை எந்த இந்திய நடிகரும் செய்திடாத வகையில், ஒரே ஆண்டில் பதான், ஜவான் என இரண்டு படங்களின் மூலமாக அடுத்தடுத்து 1000 கோடி ரூபாய் வசூல் செய்து ஒரு புதிய சாதனையை படைத்திருக்கிறார் ஷாருக்கான்.

இந்நிலையில்  நடிகர் ஷாருக்கானுக்கு தொடர்ந்து சில கொலை மிரட்டல்கள் வருவதாக புகார் தெரிவிக்கப்பட்டது. யார் இந்த கொலை மிரட்டல்களை விடுகின்றனர் என்ற தகவல்கள் இன்னும் சரியாக தெரியவில்லை.

இதனால் ஷாருக்கானுக்கு ஒய் ப்ளஸ் பாதுகாப்பு வழங்கப்படும் என மும்பை காவல்துறை அறிவித்துள்ளது.

இனி நடிகர் ஷாருக்கானுடன் ஆயுதம் ஏந்திய பாதுகாப்பு அதிகாரிகள் ஆறு பேர் அவர் வெளியில் செல்லும்போது எந்நேரமும் பாதுகாப்புக்காக இருப்பார்கள் என்றும்,

அவரது வீட்டை சுற்றி 24 மணி நேரமும் ஆயுதம் ஏந்திய போலீசார்கள் பாதுகாப்புக்கு இருப்பார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் ஷாருக்கானுக்கு முன்னதாகவே நடிகர் சல்மான் கான், நடிகை கங்கனா ரனாவத், தி காஷ்மீர் பைல்ஸ் படத்தை இயக்கிய இயக்குனர் விவேக் அக்னிஹோத்ரி உள்ளிட்ட சில பாலிவுட் நட்சத்திரங்களுக்கும் இதே போல் ஒய் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

– கார்த்திக் ராஜா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

அதிமுக பாஜகவை பாதுகாக்கிறது: அமைச்சர் ரகுபதி

காசாவை கைப்பற்றிய இஸ்ரேல்

‘நான் நிரூபிக்கவா’ , “யாருக்கு துணிச்சல் இல்லை’ : ஸ்டாலின் -எடப்பாடி காரசார விவாதம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share