பிரெஞ்சுக் கலைஞரான மேடம் டூஸாட்ஸ், மெழுகுச் சிலை வடிவமைப்பதில் உலகப்புகழ் பெற்றவர். இவர், லண்டனில் ஏற்படுத்திய மெழுகுச் சிலை அருங்காட்சியகம் அவரது பெயராலேயே வழங்கப்படுகிறது.
இங்கு, உலகப்பிரசித்திபெற்ற தலைவர்களின் மெழுகுச் சிலைகள் இடம்பெறுகின்றன. சிங்கப்பூர், லண்டன், ஹாங்காங் மற்றும் பேங்காக் நகரங்களில் உள்ள டூஸாட்ஸ் அருங்காட்சியகக் கிளைகளில் மோடியின் மெழுகுச் சிலைகள் இடம்பெறவுள்ளன.
இதில், ஒரு சிலை இந்தியப் பிரதமர் மோடியின் பார்வைக்காக புதுடெல்லி அனுப்பப்பட்டது. அதைப்பார்த்து ரசித்த பிரதமர் தனது ட்விட்டர் பக்கத்தில், நான் என்ன சொல்வது? கலையைப் பொருத்தவரை, மேடம் டூஸாட்ஸ் மெழுகுச் சிலை கலைஞர்கள் பிரமாதமானவர்கள். பிரம்மாவைப் போல் இக்கலைஞர்கள் சிலைகளைப் படைக்கிறார்கள்” எனப் புகழ்ந்து புகைப்படத்தையும் பகிர்ந்தார்.
இதை சோசியல் மீடியாவில் ‘நான் வெளிநாடு டூர் போறப்ப நீ இங்க இருந்து பார்த்துக்கோ!’, ‘மெழுகுச் சிலை கலைஞர்கள் ஒரு சிலையை மட்டும் கொஞ்சம் குள்ளமா கலர் கம்மியா செஞ்சுட்டாங்க (உண்மையில் அது மோடி)’ என சரமாரியாக கேலி செய்து ட்ரெண்ட் ஆக்கிவிட்டனர்.
