டிசம்பரில் ஜி.வியின் அடுத்த படம்!

Published On:

| By Balaji

17 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் திரைப்படம் இயக்கத் தயாராகி வருகிறார் இயக்குநரும், ஒளிப்பதிவாளருமான ராஜீவ் மேனன்.

மம்முட்டி, ஐஸ்வர்யா ராய், அப்பாஸ் நடிப்பில் 2000இல் வெளிவந்த `கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’ படத்துக்குப் பின்னர் எந்த படமும் இயக்கவில்லை. கடந்த பத்து ஆண்டுகளில் குரு, கடல் ஆகிய இரு படங்களில் மட்டும் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றியுள்ளார். இப்படி தனது சினிமா பணிகளை குறைத்துக்கொண்டு, ஓய்விலிருந்த ராஜீவ் மேனன் தற்போது ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார். இந்தப் படத்துக்கு ‘சர்வம் தாளமயம்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

முழுக்க இசைப் பின்னணியில் உருவாகும் இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இப்படத்துக்கான பாடல்களை இப்போதே அவர் உருவாக்கிக் கொடுத்துவிட்டார். இசைக்கு முக்கியத்துவம் உள்ள இப்படத்தில் மொத்தம் 9 பாடல்கள் இருக்கின்றன. இப்படத்தில் ட்ரம்ஸ் வாத்திய கலைஞராக நடிக்க இருக்கிறார் ஜி.வி.

கடந்த ஒரு வருட காலமாக அறிவிப்பாகவே இருந்த இப்படத்தின் படப்பிடிப்பு வரும் டிசம்பர் மாதம் தொடங்கவுள்ளதாக ராஜீவ் மேனன் அறிவித்துள்ளார்.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share