சியோமி நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட் டிவி அறிமுகம்!

Published On:

| By Jegadeesh

சியோமி நிறுவனம் புதிய எக்ஸ் சீரிஸ் ஸ்மார்ட் டிவிகளை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

நம் அனைவரின் கையிலும் பொழுதுபோக்குக்கான சகல வசதிகளும் கொண்ட ஸ்மார்ட்போன்கள் இருந்தாலும், வீட்டில் குடும்பத்துடன் அமர்ந்து டிவி பார்த்து பொழுதை கழிப்பது என்பது ஆனந்தம் தான் .

ADVERTISEMENT

இப்போதெல்லாம், ஸ்மார்ட்போனில் இருக்கும் அத்தனை சிறப்பம்சங்களும் டிவியிலும் வந்து விட்டது.

ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் தான் அடிக்கடி அப்டேட்களை கொடுத்து வாடிக்கையாளர்களை தங்கள் வசம் வைத்து கொள்ளும்.

ADVERTISEMENT

ஆனல் இப்போது, ஸ்மார்ட் போன்களுக்கு இணையாக ஸ்மார்ட் டிவிகளும் அவ்வப்போது புது புது அப்டேட்களுடன் வெளிவந்த வண்ணம் உள்ளது.

Xiaomi new smart TV

அந்த வரிசையில், சியோமி நிறுவனம் தனது புதிய எக்ஸ் சீரிஸ் ஸ்மார்ட் டிவியை அறிமுகம் செய்துள்ளது.

ADVERTISEMENT

இதன் சிறப்பம்சங்களை பார்ப்போம்..

சியோமி எக்ஸ் சீரிஸ் மாடலின் கீழ் 3 மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த 3 மாடல்களும் 43′ இன்ச், 50′ இன்ச் மற்றும் 55′ இன்ச் என்ற வெவ்வேறு அளவுகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Xiaomi new smart TV
  • மூன்று மாடல்களும் 3840 x 2160 பிக்சல்கள் உடைய 4K அல்ட்ரா எச்டி டிஸ்பிளேவை கொண்டுள்ளது.
  • 60Hz ரெஃபிரெஷ் ரேட் வீதத்துடன் LED பேக்லிட் LCD பேனலைக் கொண்டுள்ளன. இவை, HDR10, HLG மற்றும் டால்பி விஷன் போன்ற பல HDR தரநிலை அம்சங்களுடன் கூடிய டிஸ்பிளேவுடன் வருகிறது.
  • 94% DCI-P3 கலர் காமேட் தொழில்நுட்பத்தை உள்ளடக்கியது. இது MEMC மற்றும் ‘விவிட் பிக்சர் என்ஜின்’எனப்படும் சியோமியின் தனியுரிமை கலர் டியூனிங் அம்சத்துடன் இடம்பெற்றுள்ளது.
  • இதன்மூலம் சிறப்பான பிக்சர் குவாலிட்டியுடன் படங்களை காணமுடியும்.ஆண்ட்ராய்டு டிவி 10 இயங்குதளம் மூலம் இயங்கும் இந்த ஸ்மார்ட் டிவியில், குவாட் கோர் ARM Cortex-A55 CPU மற்றும் ARM Mali G52 MC1 GPU வழங்கப்பட்டுள்ளது.
Xiaomi new smart TV
  • 2ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி ஸ்டோரேஜை உள்ளடக்கியுள்ளது.
    30W ஸ்பீக்கர்கள் உடன் Dolby Audio, DTS Virtual X மற்றும் DTS-HD போன்ற ஆடியோ வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் தெளிவான ஆடியோ அனுபவத்தை பெறலாம்.
  • சியோமி எக்ஸ் சீரிஸ் 43” இன்ச் மாடல் ரூ.28,999 ஆகவும், சியோமி எக்ஸ் சீரிஸ் 50” இன்ச் டிவி மாடல் ரூ.34,999 ஆகவும், சியோமி எக்ஸ் சீரிஸ் 55” இன்ச் டிவி மாடல் ரூ.39,999 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மு.வா.ஜெகதீஸ் குமார்

vivo y35 launch: பட்ஜெட் விலையில் அசத்தல் ஸ்மார்ட் போன்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share