மூன்றாவது முறையாக அதிபராக பதவியேற்றார் ஜி ஜிங்பிங்

Published On:

| By Kavi

சீனா அதிபராக ஜி ஜிங்பிங் மூன்றாவது முறையாக இன்று (மார்ச் 10) பதவி ஏற்றுக்கொண்டார்.

சீன அரசியலமைப்பு படி ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் கூடி பொதுக்குழு மூலம் அதிபரை தேர்ந்தெடுப்பார்கள்.

அந்த வகையில் ஜி ஜிங்பிங் பதவி காலம் முடிவடைந்ததையொட்டி சீனாவில் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாடு கடந்த அக்டோபர் மாதம் 16ஆம் தேதி தொடங்கி நடைபெற்றது.

இதன் முடிவில் அதிபர் ஜி ஜிங்பிங் மூன்றாவது முறையாக சீனாவின் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

சீனாவில் இரண்டு முறை மட்டுமே அதிபராக முடியும் என்ற வரம்பை கடந்த 2018 ஆம் ஆண்டு ஜி ஜிங்பிங் நீக்கினார். இந்த சூழலில் அவர் மூன்றாவது முறையாக அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன்படி இன்று அந்நாட்டு நாடாளுமன்றத்தில் மூன்றாவது முறையாக அதிபராக பதவி ஏற்றுக்கொண்டார்.

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் நிறுவனரான மாவோ தான் இதுவரை இரண்டு முறை சீன அதிபராக இருந்திருக்கும் நிலையில் தற்போது ஜி ஜிங்பிங் மூன்றாவது முறையாக அதிபர் ஆகியுள்ளார். மத்திய ராணுவ ஆணையத்தின் தலைவராகவும் ஜி ஜிங்பிங் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

முன்னதாக 2019ஆம் ஆண்டு ஜி ஜிங்பிங் தமிழகம் வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரியா

தங்கம் விலை உயர்வு: இன்றைய நிலவரம்!

பேட் கம்மின்ஸ் தாயார் மறைவு: கருப்பு பட்டை அணிந்து விளையாடும் வீரர்கள்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share