ராமதாஸை தேடி வந்த மோடியின் தம்பி

Published On:

| By Balaji

அண்மையில், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்த நிலையில் நேற்று (டிசம்பர் 16) பிரதமர் மோடியின் சகோதரர் பிரகலாத் மோடி விழுப்புரம் மாவட்டம் தைலாபுரம் தோட்டத்தில் டாக்டர் ராமதாஸை தேடி வந்து சந்தித்திருக்கிறார்.

தைலாபுரம் தோட்டத்திற்கு வந்த பிரகலாத் மோடியை ராமதாஸும்,, பா.ம.க. இளைஞரணித் தலைவரான அன்புமணியும் வரவேற்றனர். தொடர்ந்து நடைபெற்ற சந்திப்பின்போது, தேசிய அளவில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் முன்னேற்றம், அதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் உள்ளிட்டவை குறித்து இருவரும் விவாதித்ததாக தெரிகிறது. . தமிழக அளவிலும் தேசிய அளவிலும் சமூக நீதிக்கு பாமக ஆற்றிய பங்கு பற்றியும் ராமதாஸ், பிரகலாத் மோடியிடம் எடுத்துக் கூறியிருக்கிறார்.

ADVERTISEMENT

பெண் குழந்தைகளின் பாதுகாப்புக்காகவும், கல்வி வளர்ச்சிக்காகவும் நரேந்திர மோடி தலைமையிலான அரசு செயல்படுத்தி வரும் பேட்டி பச்சாவோ, பேட்டி பதாவோ ( Beti Bachao Beti Padhao) திட்டத்தின் செயல்பாடுகள் குறித்த புத்தகம் ஒன்றை ராமதாஸிடம் பிரகலாத் மோடி வழங்கினார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share