மோகன் லாலுடன் இணைந்த ‘பிச்சைக்காரன்’ நாயகி!

Published On:

| By Balaji

நடிகை சட்னா டைடஸ் தற்போது மலையாளத் திரையுலகில் அறிமுகமாகவுள்ளார்.

சசி இயக்கத்தில் 2016ஆம் ஆண்டு வெளியாகி கவனம் ஈர்த்த திரைப்படம் பிச்சைக்காரன். விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடித்த அப்படம் தாய் பாசத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகியிருந்தது. தொலைக்காட்சியில் ஒளிபரப்பான போதும் அதிகமான பார்வையாளர்களைப் பெற்ற இரண்டாவது படமாக உள்ளது. இந்தப் படத்தில் கதாநாயகியாக நடித்த சட்னா டைடஸ் தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் பிரபலமானார்.

ADVERTISEMENT

பிச்சைக்காரன் படத்தைத் தொடர்ந்து கலையரசனுக்கு ஜோடியாக எய்தவன் படத்தில் நாயகியாக நடித்திருந்தார். கயல் படத்தில் நடித்த சந்திரனுக்கு ஜோடியாக திட்டம் போட்டு திருடுற கூட்டம் படத்திலும் இணைந்து நடித்துள்ளார். மேலும் கடந்த ஆண்டு நீடி நாடி ஒரே கதா படத்தின் மூலம் தெலுங்குத் திரையுலகில் அறிமுகமானார்.

தமிழ், தெலுங்கு திரையுலகில் வலம் வரும் சட்னாவுக்கு தற்போது மலையாளத் திரையுலகில் இருந்தும் அழைப்பு வந்துள்ளது. மலையாளத்தில் லூசிபர் என்ற ஹிட் படத்தை சமீபத்தில் கொடுத்துள்ள மோகன் லால் தற்போது பிக் பிரதர் என்ற புதிய படத்தில் நடித்துவருகிறார். தமிழில் பிரெண்ட்ஸ், காவலன், எங்கள் அண்ணா ஆகிய படங்களை இயக்கிய சித்திக் இயக்குகிறார். இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க படக்குழு சட்னாவை ஒப்பந்தம் செய்துள்ளது.

ADVERTISEMENT

.

.

ADVERTISEMENT

**

மேலும் படிக்க

**

.

**

[சோனியா திடீர் உற்சாகம்: காரணம் என்ன?](https://minnambalam.com/k/2019/05/20/16)

**

.

**

[வாக்குக் கணிப்பும் மக்கள் முடிவும்: தேர்தல் வரலாறு சொல்வது என்ன?](https://minnambalam.com/k/2019/05/20/18)

**

.

**

[தமிழகம்: திமுக கூட்டணிக்கே சாதகம்!](https://minnambalam.com/k/2019/05/20/20)

**

.

**

[அமமுகவின் க்ளைமாக்ஸ் வியூகம்- சமாளித்தாரா செந்தில்பாலாஜி?](https://minnambalam.com/k/2019/05/19/37)

**

.

**

[ஸ்டாலின் –மம்தாவுக்கு இடையே போட்டி!](https://minnambalam.com/k/2019/05/19/38)

**

.

.

.,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share