ADVERTISEMENT

‘தோனி கபடி குழு’வில் இணைந்த லீமா

Published On:

| By Balaji

அறிமுக இயக்குநர் ஐயப்பன் இயக்கும் ‘தோனி கபடி குழு’ திரைப்படம் கபடி, கிரிக்கெட் என இரு விளையாட்டுக்களை பின்புலமாகக் கொண்டு உருவாகிவருகிறது.

விளையாட்டை மையமாக வைத்து உருவாகும் திரைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியிலும் விமர்சகர்கள் மத்தியிலும் எப்போதும் நல்லவரவேற்பு உள்ளது. ஒவ்வொரு விளையாட்டிற்குள்ளும் இருக்கிற இயல்பான சுவாரஸ்யம் திரைக்கதையை மேலும் விறுவிறுப்பாக்க உதவுகின்றன. தமிழில் கில்லி, வெண்ணிலா கபடிக்குழு, ஆடுகளம், ஜீவா, உள்ளிட்ட பல படங்கள் ஏதேனும் ஒரு விளையாட்டை பின்புலமாகக் கொண்டு உருவாகி வெற்றி பெற்றுள்ளன.

ADVERTISEMENT
ADVERTISEMENT

மை டியர் பூதம் உள்ளிட்ட பல தொடர்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த அபிலாஷ் நாகேஷ் திரையரங்கம் படத்தில் வில்லனாக நடித்திருந்தார். தற்போது தோனி கபடி குழு படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார். ரெட்டச்சுழி, தாக்க தாக்க, மலையாளத்தில் துல்கர் சல்மான் நடித்த ’பட்டம் போலே’ உள்ளிட்ட பல படங்களில் நடித்த லீமா பாபு கதாநாயகியாக நடிக்கிறார்.

படத்தின் தலைப்பை பிரதிபலிக்கும் விதமாக கிரிக்கெட்டையும் கபடியையும் மையமாக வைத்து உருவாகும் இப்படம் முழுக்க கற்பனையாக அல்லாமல் சில உண்மைச் சம்பவங்களையும் அடிப்படையாகக் கொண்டு உருவாகிவருகிறது. விழுப்புரம், உளுந்தூர் பேட்டை, கள்ளக்குறிச்சி ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. விரைவில் படத்தின் டீசர், ட்ரெய்லர் வெளியாக உள்ளது.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share