கனிஷ்க் கோல்டு: ரூ.138 கோடி சொத்துகள் முடக்கம்!

Published On:

| By Balaji

சென்னையில் கனிஷ்க் கோல்டு நிறுவனத்துக்குச் சொந்தமான 138 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்று (ஜூன்14) முடக்கியுள்ளனர்.

கனிஷ்க் கோல்டு நிறுவனத்தின் மேலாண் இயக்குநரான சென்னையைச் சேர்ந்த பூபேஷ்குமார், போலி ஆவணங்கள் மூலம் 14 பொதுத் துறை மற்றும் தனியார் வங்கிகளில் 824 கோடி ரூபாய் கடன் பெற்றதாகப் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் அமலாக்கத் துறை நடத்திய விசாரணையில், கனிஷ்க் நிறுவனம் சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனையில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. பூபேஷ்குமார், அவரது மனைவி நீட்டா ஜெயின் உள்ளிட்ட ஆறு பேர் மீது கடந்த மார்ச் மாதம் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

ADVERTISEMENT

வங்கிக்கணக்குகள் மற்றும் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியது. பூபேஷ் குமார் கடந்த மே 25 ஆம் தேதி கைது செய்யப்பட்டார். இதன் தொடர்ச்சியாக, கனிஷ்க் கோல்டு நிறுவனத்தின் 138 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்று முடக்கியுள்ளனர். இத்துடன் சேர்த்து கனிஷ்க் நிறுவனத்தின் மொத்தம் 281 கோடி ரூபாய் சொத்துகள் முடக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share