‘ஆப்பு’ரேஷன் வைகோ – அப்டேட் குமாரு

Published On:

| By Balaji

விஜயகாந்த் நான் எந்தக் கூட்டணியும் இல்லை. நான் தனியா நிற்கப்போறேன்”னு சொன்ன பிறகுதான் தேர்தல் களம் செமையா சூடு பிடிச்சிருக்கு. ‘நீங்க என்னடா எங்களை ட்ரோல் பண்றது, நாங்களே ஒருத்தருக்கொருத்தர் கலாய்ச்சுக்கிறோம்’ என்று களமிறங்கிவிட்டனர் தமிழக அரசியல்வாதிகள். “வந்துரு வந்துரு தானா வந்துரு”ன்னு விஜய்காந்த்தைப் பாத்து வைகோ உடுக்கையடிக்க, விஜயகாந்த்துடன் டீலிங் முடிக்கமுடியாத ஸ்டாலினைப் பார்த்து “என்னம்மா இப்படி பண்ணிட்டீங்களேம்மா” என கருணாநிதி கோபமாய் கலாய்க்க, விஜயகாந்த் திமுக பக்கம் போனா, நாம அதை குறைசொல்லி அதிமுக பக்கம் போயிறலாம்ன்னு கணக்குப் போட்டிருந்த மக்கள் நலக் கூட்டணி கட்சியினர் ‘வித்த ஆடு போக, சொச்ச ஆடுபோல முழுச்சுக்கிட்டு இருக்காங்க.” இந்நிலையில், நேற்று ஒரு தனியார் டிவி-க்கு வைகோ பேட்டி கொடுத்தார். ஞாயிற்றுக்கிழமை அதுவுமா ரிலாக்ஸா இருந்த நெட்டிசன்களிடம் தொக்கா வந்து மாட்டினார் வைகோ. ஏதென்ஸு நகரத்திலே…. என மக்கள் போட்ட ட்விட்கள் சில:

// @ramasamymani

ADVERTISEMENT

திமுக வைத்தவிர,மற்ற அனைவரும் மன்னிக்கத் தக்கவர்களே.- நேற்றைய வைகோ வின் பெட்டியில் நமக்கு அரைகுறையாக புரிந்தது இதுதான்.//

//‏@maninilats

ADVERTISEMENT

மாற்றத்தை ஏற்படுத்த எங்க கூட்டணிக்கு வாங்க: விஜயகாந்திற்கு வைகோ அழைப்பு

தலைவரே, அது ஒரு அழுகி போன பழமாச்சே… இன்னுமா கீழ விழல ????????????????//

ADVERTISEMENT

//@maamallan

குறைந்தபட்சம் திருமாவின் டையடிக்காத நேர்மையைக்கூட வைகோ ஸ்டாலின்களிடம் பார்க்க முடியாதது பெரிய ஏமாற்றம் //

// ‏@imw84u Mar 12

தந்தி டிவியில்

பாண்டே இன்டெர்வ்யூவ் வித் வைகோ. இறுதிவரை வைகோ கையே ஓங்கி இருந்தது #ம்க்கு எங்க பண்டேவை பேச விட்டா தானே//

//@Thiru_navu

அரசியலில் பரோட்டா சூரி லெவலுக்கு வைகோ காமெடி செய்கிறார்! சிரிக்கவும் முடியல! அழவும் முடியல! //

//@LaBalachandran

பாண்டே தான கேள்வி கேட்கனும்…

வைகோ கேள்விக்கு பாண்டே பதில் சொல்லிட்ருக்கார்… வைகோடா….//

//@withkaran

அம்மா 19 மாசம் ஜெயிலுக்கு அனுப்பி வெளிய வந்த வைகோ மறுபடியும் அம்மாவுடனே கூட்டணி வச்ச மாதிரி வேற கேவலமான கூட்டணி உண்டோ!?//

// @karthi24carat

அடுத்த முதல்வர் வைகோ என அவரிடமே சொல்லிப் பாருங்கள் அவரே ரெண்டு மூனு நாளைக்கு விழுந்து விழுந்து சிரிப்பார்//

****************************************************************************************************************************************************************************************************************************

உடுமலைப்பேட்டையில் துள்ளத்துடிக்க, ஆயிரம்பேர் கண்பார்க்க ஒரு காதல் ஜோடியை ஒரு கும்பல் வெட்டுகிறது. ஒருத்தர்கூட தடுக்க முற்படவில்லை. வயதானோர், குழந்தை வைத்திருக்கும் பெண்கள், சிறுவர்களை விடுங்கள். இளைஞர்களும், இளம்பெண்களும் வேடிக்கையே பார்த்துள்ளனர். அதைவிட அதிர்ச்சி, உடுமலை சம்பவத்தைத் தொடர்ந்து ட்விட்டரில் சில நபர்கள் சாதி வெறியோடு எழுதிய ட்விட்கள்தான். இத்தனை வெளிப்படையாக சாதி வெறியோடு எழுதும் துணிச்சலை யார் கொடுத்தது!. இத்தனைக்கும் தமிழக போலிஸின் சைஃபர் கிரைம் யூனிட் ட்விட்டரை விழிப்புடன் கண்காணித்து வருகிறது. அந்த அதிர்ச்சியான ட்விட்கள் கீழே.

//‏@alangatan

அடேய் சில்ற தலித்களா !!

வேற சாதி பொண்ண காதோல் பண்ணா இழுத்துட்டு வட மாநிலம் பக்கம் ஓடிடுங்கடா, இல்லைனா உடுமலை மாதிரி அனாதைப்பொணம் தான்..//

// @alangatan

இந்த சில்றபயலுக வேற சாதி பொண்ணை எவளையாவது காதலிச்சு அப்புறம் வெட்டு வாங்கி தான் சாவேனு திரியுவானுங்க போல.//

//@alangatan

அப்படி என்ன அரிப்பு சாதி மாறி காதலிச்சு கல்யாணம் பண்ணுற அளவுக்கு… ?!

வக்காலி இப்படிலாம் எவனும் மாட்டுனா சித்ரவதை பண்ணி கொல்லனும்//

****************************************************************************************************************************************************************************************************************

சித்தூர் முருகேசன்-வலை உலகில் மிகவும் பிரபலம். தமிழ் மற்றும் தெலுங்கிலும் ப்ளாக் எழுதி வருகிறார். இன்று காலை ஆண்-பெண் திருமண உறவு குறித்து அவரின் ஸ்டேட்டஸ் கவர்ந்தது. பெண்ணை சகஜீவனாக அணுகுவது குறித்து அவரின் வார்த்தைகள். அனுபவத்தால் விளைந்தவை. அதை இங்கு பகிர்ந்துகொள்கிறேன்.

// Murugesan Chittoor

‪#‎சொர்கம்‬ ‪#‎நரகம்‬

முதல்ல பொம்மனாட்டிய புரிஞ்சிக்க. அவள் உன் காம வெறியை தீர்க்க விலைக்கு வாங்கின ஸ்பென்சர் பொம்மை கிடையாது. அவளும் ஒரு மனுச ஜன்மம்.அவளுக்கும் தன்மானம்,லட்சியம், சுயகவுரவம்,சில கனவுகள் எல்லாம் இருக்கும். எங்கயோ பிறந்தா, எங்கயோ வளர்ந்தா உன் ஜீன் வேற, நீ வளர்ந்த என்விரான்மென்ட் வேற, இப்படி அனேக அம்சங்கள் வேற வேறயா இருக்கு. நீ ஒரு ஃப்ரேமை அடிச்சு அந்த ஃப்ரேமுக்குள்ள முடங்கிகிடன்னு சொன்னா ஆரம்பத்துல சில நாள் நல்லாவே ஓடும்.

ஃப்ரெண்ட்ஸ் சர்க்கிள்ள “உங்க வீட்ல மதுரையா ,சிதம்பரமானு கேட்டா ” பந்தாவா அந்த பருப்பெல்லாம் வேகாது கண்ணா நம்ம வீட்ல நான் போட்டதுதான் சட்டம்னு சொல்லிக்கலாம்.

அவள் வீக்கர் செக்ஸ், ஃபிசிக்கலா தான் வீக்கு, சைக்கலாஜிக்கலா செமை ஸ்ட் ராங்கு. அவளை நீ அடிமைப்படுத்திட்டன்னு வை . அடிமை என்ன பண்ணுவான் ? புரட்சி பண்ண சமயம் பார்த்துக்கிட்டிருப்பான். நீ உன் லெவல்ல உன்னால சமாளிக்க முடியாத பிரச்சினைல மாட்டினப்போ தன் விடுதலைக்கு ட்ரை பண்ண ஆரம்பிச்சுருவான்.

நீ எஃப்.டி. போட்ட ஃபைனான்ஸ் கம்பெனிக்காரன் ஓடிப்போனப்பவோ, ஆஃபீஸ்ல மெமோ வாங்கி சஸ்பெண்ட் ஆனப்பவோ வச்சுருவா ஆப்பு. டேக் கேர்.

மனிதர்களில் இரண்டு வகைனு ஒரு பதிவை படிச்சிருப்பிங்க. பொதுவா பெண் சந்திர குணங்கள் கொண்டவ. (விதி விலக்குகள் இருக்கலாம்) . அவள் ஒரு ஆறு . நீ ஒரு கரை . அவள் பெருக்கெடுத்து ஓடறப்ப நெகிழ்ந்து கொடுத்தா, ஒன்னு ரெண்டு சேனல் திறந்துவச்சா ஓகே.இல்லேன்னா கரையே காணாம போயிரும்.

அவளை உனக்கு டூப்ளிகேட்டாவும் மாத்தலாம். அல்லது அவள் ஒரிஜினலா இருக்க சைடு கொடுத்து அவ கிட்டே இருக்கிற சில பிரத்யேக திறமைகளை உன்+உன் குடும்ப வளர்ச்சிக்கு உபயோகிச்சுக்கவும் முடியும். உனக்கு எது நல்லதுனு நீயே முடிவு பண்ணு.

பெண் இயற்கையின் பிரதி. இயற்கையின் நிதி, இயற்கையின் பிரதி நிதி. இயற்கைய அப்சர்வ் பண்ணி, ரசிக்க கத்துக்கிட்டா அதன் போக்கை புரிஞ்சிக்கிட்டு அதன் போக்குல போய் உபயோகிச்சுக்க கத்துக்கிட்டா மாசத்துக்கு மூணுமழை கியாரண்டி.

சில நேரங்கள்ள நீ ஒரு தந்தையா இருக்க வேண்டி வரும். (அவளுக்குள்ளே இருக்கிற கடைக்குட்டி பொண்ணு வெளிப்படறப்போ)

சில நேரங்கள்ள நீ ஒரு மகனா இருக்க வேண்டி வரும். (அவளுக்குள்ளே இருக்கிற தாய் வெளிப்படறப்போ)

நீ சைக்காலஜிப்படி பார்த்தாலும், ஜோதிஷத்தின் படி பார்த்தாலும் ஒவ்வொரு நாலு நிமிசத்துக்கும் மனுஷ மனம் மாறுது, ரெண்டு மணி நேரத்துக்கு ஒரு தரம் முழுசா மாறுது.

உன் மனசும் மாறுது,அவள் மனசும் மாறுது. மாறாதது மாற்றம் ஒன்னுதான். நீ மாற்றத்தை ரெகக்னைஸ் பண்ணிட்டா உன் வாழ்க்கையே ஒரு ஸ்வர்கம். அதை ஏத்துக்கலன்னா அதான் நரகம்.

**********************************************************************************************************************************************************************************************

இயக்குநர் மிஷ்கினின் அடுத்த படம் ‘துப்பறிவாளன்’. விஷால் நடிக்கும் இந்தப் படத்தின் இசையமைப்பாளர் அரோல் குரோலி. தனது முகநூலில் மூவரும் இருக்கும் படத்தை வலையேற்றியுள்ளார். நிறைய ஷேர் ஆகி வருகிறது.

-லாக் ஆஃப்,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share