விராட் கோலியின் அந்த ஒரு வீடியோ… ஃபேன் பாயாக மாறிய WWE லெஜண்ட்!

Published On:

| By christopher

wwe legend john cena shared virat kohli pic

தனது ஸ்டைலில் வீடியோ வெளியிட்ட விராட்கோலியின் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார் WWE சூப்பர் ஸ்டார் ஜான் சீனா. wwe legend john cena shared virat kohli pic

ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி இதுவரை விளையாடிய 4 போட்டிகளில் 3ல் வெற்றி பெற்று தனது ஆதிக்கத்தை காட்டி வருகிறது. குறிப்பாக சென்னை மற்றும் மும்பை அணியை பல ஆண்டுகளுக்கு பிறகு, அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி ஆச்சரியப்பட வைத்தது.

அணியின் வெற்றிக்கு அந்த அணியின் மூத்த வீரரான விராட்கோலி 2 அரைசதத்துடன் அதிரடியாக ஆடி வருவதும் காரணமாக பார்க்கப்படுகிறது.

கடந்த 7 ஆம் தேதி மும்பை அணிக்கு எதிரான போட்டிக்கு முன்னதாக, விராட்கோலியின் ஒரு வீடியோ சமூகவலைதளத்தில் வைரலானது.

அதில், இந்திய அணி டி20 உலகக் கோப்பை சாம்பியன் ஆனபோது வழங்கப்பட்ட மோதிரம் அணிந்து, WWE சூப்பர் ஸ்டார் ஜான் சீனாவின் ‘யூ கேன்ட் சீ மீ’ சைகையை காட்டியபடி அணி வீரர்களுடன் நடனம் ஆடினார். அந்த வீடியோ அவரது ரசிகர்கள் சமூக வலைதளத்தில் பகிர வைரலானது.

இந்த நிலையில், தனது ஸ்டைலில் வெளியான விராட்கோலியின் வீடியோவைக் கண்டு உற்சாகமடைந்துள்ளார் ஜான் சீனா. மேலும் ஒரு ஃபேன்பாயாக மாறி, கோலியின் புகைப்படத்தையும் தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் கணக்கில் பகிர்ந்துள்ளார்.

உலகின் இரு வேறு விளையாட்டு போட்டியைச் சேர்ந்த சூப்பர் ஸ்டார்கள் இன்று இணையத்தில் இணைந்துள்ளது இருவரின் கோடிக்கணக்கான ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share