WTC Final: இந்தியா, ஆஸ்திரேலியா அணிக்கு ஐசிசி அபராதம்!

Published On:

| By Jegadeesh

லண்டன் ஓவலில் நடந்த ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் மெதுவாக பந்து வீசியதற்காக இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிக்கு ஐசிசி அபராதம் விதித்துள்ளது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி இங்கிலாந்தில் உள்ள லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. இதில் 209 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

ADVERTISEMENT

இந்நிலையில், இந்த தொடரில் மெதுவாக பந்து வீசியதற்காக இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிக்கு ஐசிசி இன்று(ஜூன் 12) அபராதம் விதித்துள்ளது. அதன்படி, இந்தியாவுக்கு போட்டி கட்டணத்தில் 100 சதவீதமும், ஆஸ்திரேலியாவுக்கு போட்டி கட்டணத்தில் 80 சதவீதமும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

WTC Final: ICC fines India and Australia

மேலும், நடுவர் தனக்கு அவுட் கொடுத்தது குறித்து வெளிப்படையாக விமர்சித்ததற்காக இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் சுப்மன் கில்லுக்கு போட்டி கட்டணத்தில் 15 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் ஸ்லோ ஓவர் ரேட்டிற்காக இந்தியாவுக்கு அபராதம் விதிக்கப்படுவது இது இரண்டாவது முறையாகும். கடந்த 2021 டிசம்பரில் அடிலெய்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் இதே தவறுக்காக போட்டி கட்டணத்தில் 40 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மு.வா.ஜெகதீஸ் குமார்

ADVERTISEMENT

இசையமைப்பாளராக அறிமுகமாகும் ஏ.ஆர்.ரஹ்மான் மகள்!

யுபிஎஸ்சி முதல்நிலை தேர்வு முடிவுகள் வெளியானது!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share