கிராஸ்வேர்ட் புத்தக நிலைய நிறுவனம் நடத்தும் புத்தகங்களுக்கான விருதிற்கான குறும்பட்டியலில் எழுத்தாளர் சாரு நிவேதிதாவின் ‘நான் தான் ஔரங்கசிப்’ நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பு பதிப்பான ‘கான்வெர்சேஷன்ஸ் வித் ஔரங்கசிப் (conversations with Aurangazeb)’ என்கிற நாவல் இடம்பெற்றுள்ளது. இந்த நாவலை நந்தினி கிருஷ்ணன் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்.
வாசகர்களின் வாக்குகளின் அடிப்படையில் இந்த விருது வழங்கப்படவுள்ளது. இந்தப் பட்டியலில் ஃபிக்ஷன், நான் ஃபிக்ஷன், வர்த்தகம் மற்றும் மேலாண்மை, குழந்தைகளுக்கான புத்தகங்கள், மொழிபெயர்ப்பு புத்தகங்கள், மனம் மற்றும் உடல் மேம்பாடு குறித்த புத்தகங்கள் ஆகிய பிரிவுகளின் கீழ் பல புத்தகங்கள் இடம்பெற்றுள்ளன.
மேலும், எழுத்தாளர் பெருமாள் முருகனின் ‘ஃபயர் பேர்ட்’ எனும் மொழிபெயர்ப்பு புத்தகமும் மலையாள எழுத்தாளர் ஏ.ஜே.தாமஸின் ‘தி கிரேட்டஸ்ட் மலையாளம் ஸ்டோரீஸ் எவெர் டோல்ட்’ என்கிற புத்தகமும் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.
இந்த நிலையில், இதுகுறித்து எழுத்தாளர் சாரு நிவேதிதா தனது வலைப்பதிவு பக்கத்தில், ‘ கிராஸ்வேர்ட் விருது குறும்பட்டியலில் என்னுடைய ‘நான் தான் ஔரங்கசிப்’ நாவலின் மொழிபெயர்ப்பான ‘கான்வெர்சேஷன்ஸ் வித் ஔரங்கசிப் : ஏ நாவல்’-உம் இடம்பெற்றுள்ளது. கூடவே கேரள எழுத்தாளர் ஏ.ஜே.தாமஸின் நூலும் உள்ளது.
இந்நேரம், கேரளத்தில் மாத்ருபூமியிலும், மலையாள மனோராமாவிலும் இது பற்றிய விரிவான செய்தி அவரது புகைப்படத்துடன் முதல் பக்கத்தில் வந்திருக்கும். இந்நேரம் அறுபதாயிரம் பேர் தாமஸின் நூலுக்கு வாக்களித்திருப்பார்கள். இது தான் அட்டைக்கத்தியுடன் களம் இறங்கியிருக்கும் தமிழ் எழுத்தாளனின் கதை. இதுவே ஒரு சினிமாவுக்கு நடந்திருந்தால் தமிழ்நாடே இரண்டுபட்டிருக்கும். இது இலக்கியம். என்ன செய்ய..?’ எனப் பதிவிட்டுள்ளார்.
எழுத்தாளர் சாரு நிவேதிதா எழுதியதில் மிகவும் புகழ்பெற்ற நாவல் தான் ‘நான் தான் ஔரங்கசிப்’ . பிஞ்ஜ் செயலியில் தொடக்கத்தில் அது வாரம் ஒருமுறை வந்த போது, ஒரு வாரம் எங்களால் காத்திருக்க முடியாது என வாசகர்கள் சொன்னதால் வாரம் மூன்று முறை எழுதினார் சாரு நிவேதிதா என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போது கிராஸ்வேர்டு விருது பட்டியலில் இடம்பெற்றிருக்கும் சாரு நிவேதிதாவின் இந்த நாவலுக்கு வாக்களிக்க விரும்புவோர், கீழே உள்ள லிங்கைத் தொடரவும்.
வாக்களிக்க: https://www.crossword.in/pages/crossword-book-awards
– ஷா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஈரானைத் தாக்கிய இசுரேல்… நோக்கத்தைப் போட்டுடைத்த நெதன்யாகு
திமுக ‘எப்போதும் வென்றான்’… விஜய்க்கு ஸ்டாலின் மறைமுக பதில்!