உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: கோப்பையை கைப்பற்றிய ஆஸ்திரேலியா

Published On:

| By Selvam

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிபோட்டியில் ஆஸ்திரேலிய அணி 209 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதிய உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி இங்கிலாந்து லண்டன் ஓவல் மைதானத்தில் ஜூன் 7-ஆம் தேதி துவங்கியது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 469 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

ADVERTISEMENT
world test championship aus beat india 209 runs

இதனை தொடர்ந்து ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 296 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஆஸ்திரேலிய அணி 173 ரன்கள் முன்னிலையுடன் 2-ஆவது இன்னிங்சை தொடர்ந்தது. 84.3 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 270 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இதனால் இந்திய அணிக்கு 444 ரன்கள் இலக்கு நிர்ணயம் செய்தது.

4-ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் எடுத்திருந்தது. விராட் கோலி மற்றும் ரஹானே களத்தில் இருந்தனர்.

ADVERTISEMENT

இன்று ஐந்தாம் நாள் மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடைபெற்றது. விராட் கோலி, ரஹானே ஜோடி நிதானமாக ஆட்டத்தை தொடர்ந்தது. 46-ஆவது ஓவரில் ஸ்காட் போலண்ட் ஓவரில் விராட் கோலி கேட்ச் கொடுத்து 49 ரன்களில் அவுட்டானார். அவரை தொடர்ந்து களமிறங்கிய ஜடேஜா டக் அவுட் ஆனார்.

world test championship aus beat india 209 runs

அடுத்தடுத்து விக்கெட்டுகள் வீழ்ந்ததால் இந்திய அணியை சரிவில் இருந்து மீட்க ரஹானே, பரத் ஜோடி ஆட்டத்தை தொடர்ந்தனர். ரஹானே மிட்சல் ஸ்டார்க் பந்துவீச்சில் 46 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனை தொடர்ந்து களமிறங்கிய தாக்கூர், உமேஷ் யாதவ், முகமது ஷமி, முகமது சிராஜ் உள்ளிட்டோரும் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

ADVERTISEMENT

இந்திய அணி 63.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 234 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஆஸ்திரேலிய அணி 209 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்றது.

செல்வம்

“கூட்டணி குறித்து அமித்ஷா முடிவெடுக்க முடியாது” – செம்மலை

“அமித்ஷா வருகையால் மு.க.ஸ்டாலினுக்கு ஜூரம்” : அண்ணாமலை

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share